பக்கவாதத்திற்கு பிறகு நடந்து செல்வதை மேம்படுத்த ஓடுபொறி (treadmill) மற்றும் உடல் எடை தாங்கி பயிற்சி (body weight support)

திறனாய்வு கேள்வி: ஓடுபொறி பயிற்சி (treadmill) மற்றும் உடல் எடைதாங்கியுடன் தனியாகவோ அல்லது இணைத்தோ பயிற்சி கொடுக்கப்பட்டால் அது எந்த சிகிச்சையும எடுத்துக்கொள்ளாதவர்கள் அல்லது இதர நடை பயிற்சி, போன்றவற்றை மேற்கொண்டவர்களோடு ஒப்பிடுகையில் நடக்கும் திறன் மேம்பட்டுள்ளதா என நாங்கள் மதிப்பீடு செய்தோம். இது 2005 மற்றும் 2014லில் வெளியிடப்பட்ட திறனாய்வின் புதுப்பிப்பாகும்.

பின்புலம் பக்கவாத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 60% பேரில் நடப்பதில் சிரமங்கள் காணப்படும் மேலும் நடத்தலை மேம்படுத்துவது புனர்வாழ்வளிப்பின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். உடல் எடை ஆதரவு கொண்டு அல்லது இல்லாமல் அளிக்கப்படும் ஓடுபொறி நடைபயிற்சிக்கு உதவ சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தபடுகிறது.

ஆய்வு பண்புகள்: நாங்கள் மார்ச் 2017 வரை 3105 பங்கேற்பாளர்களை, கொண்ட, 56 பொருத்தமான ஆய்வுகளை அடையாளம் கண்டோம். இருபத்தி இரண்டு ஆய்வுகள் (1588 பங்கேற்பாளர்கள்) ஓடுபொறியுடன் உடல் எடை ஆதரவு பயிற்சியை வேறு இயன்முறை சிகிச்சையுடன் ஒப்பிட்டது; 16 ஆய்வுகள் (823 பங்கேற்பாளர்கள்) உடல் எடை ஆதரவி ல்லாமல் ஓடுபொறி பயிற்சியைபெற்றவர்களுடன் மற்ற இயன்முறை சிகிச்சைபெற்றவர்கள் அல்லது சிகிச்சையை பெறாதவர்கள் அல்லது போலி சிகிச்சைபெற்றவர்களுடன்ஒப்பிட்டது; இரண்டு ஆய்வுகள் (100 பங்கேற்பாளர்கள்) ஓடுபொறியுடன் உடல் எடை ஆதரவு பயிற்சி பெற்றவர்களுடன் உடல் எடை ஆதரவுயில்லாமல் ஓடுபொறி பயிற்சிஎடுத்தவர்களுடன் ஒப்பிட்டது; மற்றும் நான்கு ஆய்வுகளில்பங்கேற்பாளர்கள்(147 பங்கேற்பாளர்கள்) தங்களுக்கு உடல் எடை ஆதரவு பயன்படுத்தப்பட்டதா அல்லது இல்லையாஎன்பதை தெரிவிக்கவில்லை. பங்கேற்பாளர்களது சராசரி வயது 60, மேலும்ஆய்வுகள் உள்நோயாளி மற்றும் வெளிநோயாளி பிரிவு ஆகிய இரண்டிலும் மேற்கொள்ளப்பட்டன.

முக்கிய முடிவுகள் இந்த திறனாய்வின் முடிவுகள் ஓரளவு தெளிவற்று இருந்தது. உடல் எடைஆதரவு அல்லது அது இல்லாமல் ஓடுபொறி பயிற்சி பெறும் பக்கவாதநோயாளிகளுக்கு சுதந்திரமாக நடக்கும் தங்கள் திறனை மேம்படுத்த அதிக வாய்ப்பு இல்லை. ஆதாரங்களின் தரத்தை குறைவாக இருந்தது. எனினும், உடல் எடைஆதரவு அல்லது அது இல்லாமல் ஓடுபொறி பயிற்சி பெறுபவர்களது நடைபயிற்சி வேகம் மற்றும் நடை திறன் ஓடுபொறி பயிற்சி பெறாதவர்களை ஒப்பிடுகையில் மேம்பட்டு இருக்ககூடும்.. சான்றின் தரம் மிதமாக இருந்தது. மிகக் குறிப்பாக, சிகிச்சை தொடக்கத்தில் நடக்க இயலும் நிலையிலுள்ள பக்கவாத நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை நன்மைபயக்கும் என்று தோன்றுகிறது ஆனால் சிகிச்சை தொடங்கிய நேரத்தில் சுதந்திரமாக நடக்கஇயலாதநோயாளிகளுக்குஎந்த வகையான நன்மையும் பயக்காது. இந்த ஆய்வு நடக்க முடியும் நிலையிலுள்ள நபர்கள் நடை வேகம் மற்றும் அயர்வு வலிமையை இந்த சிகிச்சை உறுதியான தாக்கம் அளிக்காது என்று கண்டறிந்தது. விழுதல் போன்ற தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் மற்றும் பயிற்சியை கைவிட்டுவிடுவ்து போன்றவை ஓடுபொறி பயிற்சி பெறுபவர்களுக்கு அடிக்கடி ஏற்படவில்லை.

மேலும் பகுப்பாய்வு செய்ததில் பக்கவாததிற்கு பின் முதல் மூன்று மாதங்களுக்கு அளிக்கப்படும் ஓடுபொறி பயிற்சிகள் நடை வேகம் மற்றும் அயர்வு வலிமையை மிதமான மேம்பாடுத்துகிறதுஎன காண்பிக்கிறது. நாள்பட்ட நோய் நிலையில் (அதாவது ஆறு மாதங்களுக்கு மேல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்) சிகிச்சை எடுத்துகொள்பவர்களுக்கு பலன்கள் சிறியதாக இருந்தது. ஓடுபொறி பயிற்சி அதிக அளவில் மேற்கொண்டால் நடை வேகம் மற்றும், அயர்வு வலிமையில் அதிக பலன்களை ஏற்படுத்தும். இருப்பினும் அந்த பயன் உறுதியானதாக இல்லை. குறுகிய கால ஓடுபொறி பயிற்சிகள் (நான்கு வாரத்திற்கு அளிப்பது) மிதமான முநேற்றத்தை குடுக்கும் என்ற போதிலும் அது மருத்துவரீதியாக முக்கியத்துவம் வந்ததாக இருக்கவில்லை.

பங்கேற்பாளர்களின் வயது அல்லது பக்கவாத வகை எவ்வாறு தாக்கம் உண்டுபண்ணும் என்று இந்த திறனாய்வு செய்யவில்லை.

பக்கவாததிற்கு பிறகு நடக்க முடியும் நோயாளிகளுக்கு ஓடுபொறி (உடல் எடை ஆதரவுடன் அல்லது இல்லாமல்) நடைபயிற்சி நடக்கும் திறனை மேம்படுத்தவல்லதாக தோன்றுகிறது, ஆனால், நடக்க இயலாதவர்களுக்கு ஓடுபொறி பயிற்சியால் எவ்வித லாபமும் இல்லை என்று தெகிறது. மேற்கொண்டு ஆராய்ச்சிகள் ஓடுபொறி பயிற்சியில் வெவ்வேறு தொடர் இடைவெளி, கால அளவு மற்றும் சிகிச்சையின் செறிவு அல்லது தீவிரம் (வேகம் அதிகரிப்பு மற்றும் சாய்வு அடிப்படையில்) மற்றும் கைபிடிகிராதிகளின் பயன்பாடு ஆகியவற்றின் விளைவுகளை, குறிப்பாக அலசிஆராயவேண்டும். எதிர்கால சோதனைகள் ஏற்கனவே நடக்க முடியாத அல்லது உதவியின்றி நடக்கும் நோயாளிகளைக் கொண்டு செய்யப்பட வேண்டும். மேலும் ஆராய்சிகள் பாலினம், வயது குழு மற்றும் பக்கவாத வகை போன்ற வற்றில் யாருக்கு இது பயன் அழிக்கும் என்று ஆராயவேண்டும்.

ஆதாரங்களின் தரம்

ஓடுபொறி பயிற்சிகளுக்கு ஆதாரத்தின் தரம் குறைவு முதல் மிதமானது வரை இருந்தது. சிகிச்சை முடிந்து இருதியில் நடை வேகம் மற்றும் நடை திறனுக்கு மிதமானதாகவும் சுயமாநடக்கம் திறன் அதிகரிப்புக்கு குறைவாகவும் இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information