குறைந்த மற்றும் மத்திய வருவாய் உள்ள நாடுகளில், இலட்சக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர். பலர் நீர் சத்து குறைவால் இறக்கின்றனர். (வாய் வழி நீரேற்றக் கரைசலை பயன்படுத்தி), வாய் மூலம் திரவங்கள் கொடுப்பது குழந்தைகள் உயிர்களை காப்பாற்றும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால் அது குழந்தைகள் வயிற்றுப்போக்கு பாதிக்கப்படுகின்ற கால அளவை பாதிப்பதாக தெரியவில்லை. வயிற்றுப் போக்கின் காலம் மற்றும் தீவிரத்தன்மையை துத்தநாகம் ஊட்டச்சத்து குறைக்க உதவும்.எனவே அவை ORS-டன் ஒப்பிடுகையில் கூடுதல் பயனாக குழந்தைகள் இறப்பை குறைக்கும்.
வாய்வழி துத்தநாகம் என்றால் என்ன? அது எவ்வாறு வயிற்றுப் போக்கின் கால மற்றும் தீவிரத்தன்மையை குறைக்கும்.
துத்தநாகம் வழக்கமாக ,துத்தநாக சல்பேட், துத்தநாக அசிடேட், அல்லது துத்தநாக குளுக்கோனேட், போன்ற நீரில் கரையக்கூடிய கலவைகளாக அளிக்கப்படுகிறது. குழந்தைகளின் வயிற்றுப் போக்குக்கு, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யூனிசெஃப்) ஒரு நாளைக்கு 10 mg முதல் 20 mg துத்தநாகம் அளிக்க பரிந்துரைக்கிறது. கடுமையான வயிற்றுப் போக்குக்கு துத்தநாகம் எவ்வாறு வேலை செய்யும் என்பதற்கு பல வினைவழிஉள்ளது.அதில் சில இரைப்பை-குடல் மண்டலம் சம்பந்தமானது: துத்தநாகம் மியூகோசல் தடை சிரத்தன்மை மற்றும் எண்டிரோசைட் ப்ரஷ்-எல்லை என்சைம் நடவடிக்கையை மீட்கும்.நிணநீர்க்கலங்கள் மற்றும் குடல் நோய்க்கிருமிகளுக்கு எதிராக பிறபொருளெதிரி உருவாகுவதை அதிகரிக்கும். மற்றும் அயனி சேனல்களில் நேரடி விளைவுஉள்ளது . பொட்டாசியம் சேனல் தடுப்பானாக செயல்பட்டு அடேநோசினே 3-5 சிக்ளிக் மோனோபோஸ்பேட் வழியாக செயலூக்கப்பட்ட குளோரின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது . 30 செப்டம்பர் 2016 வரைஉள்ள ஆதரங்களை காக்ரேன் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள்.
இந்த திறனாய்வில் உள்ள ஆதாரம் நமக்கு என்ன சொல்கிறது?
இந்த திறனாய்வில், தேர்வு அடிப்படைக் கூறுகளை பூர்த்திசெய்த, 10,841 குழந்தைகள் கொண்ட 33 ஆய்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
துத்தநாகம் கொண்டு சிகிச்சை அளிப்பது, கடுமையான வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இறப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பதில் தாக்கம் எதுவும் இருக்குமா என்று எங்களுக்கு தெரியவில்லை (மிக குறைவான உறுதிப்பாடுஉள்ள ஆதாரம்). துத்தநாகம் ஊட்டச்சத்து வயிற்றுப் போக்கு உள்ள 6 மாதங்களுக்கு மேல் வயதான குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கினால் கால அளவை சராசரியாகப் பாதி நாள் வரை குறைக்கும் (மிதமான உறுதிப்பாடு) மேலும் 7 நாட்கள் வரை நீடிக்கும் வயிற்றுப் போக்குகினால் பாதிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் (மிதமான உறுதிப்பாடுஉள்ள ஆதாரம்) வயிற்றுப் போக்கின் காலத்தை ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இதன் திறன் அதிகமாக உள்ளதாக தோன்றுகிறது. இது வயிற்றுப் போக்கின் காலத்தைசுமார் ஒருநாள் குறைக்கிறது (அதிக உறுதிப்பாடுஉள்ள ஆதாரம்). ஆனால் இதற்கு மாறாக 6 மாதங்களுக்கு குறையான வயதுடைய குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கின் சராசரி கால அளவில் துத்தநாகம் ஊட்டச்சத்து எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை (குறைந்த உறுதிப்பாடுஉள்ள ஆதாரம்) மற்றும் ஏழாம் நாள் வரை வயிற்றுப் போக்கு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையிலும் எம்மாற்றமும் ஏற்படுத்தவில்லை (குறைவான ( உறுதிப்பாடுஉள்ள ஆதாரம்). துத்தநாகம் ஊட்டச்சத்து வாந்தி வருவதற்கான வாய்ப்பை இரண்டு வயது குழுக்களிலும் அதிகரிக்கும். (மிதமான உறுதிப்பாடுஉள்ள ஆதரம்). வேறு எந்த பாதகமான நிகழ்வுகளும் அறிவிக்கப்படவில்லை.
துத்தநாகம் ஊட்டச்சத்து விடாப்பிடியான வயிற்றுப் போக்கு உள்ள குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு கால அளவை 16 மணி நேரம் வரை குறைக்கும் (மிதமான உறுதிப்பாடு) ஆனால் வாந்தி வருதலின் ஆபத்தை அதிகரிக்கலாம் (மிதமான உறுதிப்பாடுஉள்ள ஆதரம்)
துத்தநாகம் குறைபாடு பாதிப்பு விகிதம் உள்ள பகுதிகள் அல்லது ஊட்டச் சத்துக் குறைபாடு பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ள இடங்களில், 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வயது வந்த குழந்தைகளுக்கு துத்தநாகம் பயன்உள்ளதாக இருக்கலாம். துத்தநாகம் குறைபாடு குறைவான ஆபத்துக்கூறு உள்ள இடங்களில் வாழும் குழந்தைகள், ஆறு மாதத்திற்கு குறைவான வயதுள்ள குழந்தைகள், மற்றும் நன்கு ஊட்டச்சத்து உள்ள குழந்தைகளுக்கு, துத்தநாக ஊட்டச்சத்து பயன்பாட்டை தற்போதைய ஆதாரம் ஆதரிக்கவில்லை.
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு