கேள்வி
இந்த திறனாய்வு நுண்ணுயிர்க் கொல்லிகள் தொண்டைப் புண் தொடர்புடைய பெரும் சிக்கலினைக் குறைக்க பயனுள்ளதாக இருக்குமா என்பதை தீர்மானிக்க முயன்றது.
பின்புலம்
தொண்டைபுண்கள் பாக்டீரியா அல்லது வைரஸ்களால் ஏற்படும் தொற்று ஆகும். சிலருக்கு இதனால் சிக்கல்கள் ஏற்படலாம் என்றாலும் பொதுவாக (பொதுவாக மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பின்னர்) விரைவில் குணமடைவர். இதயம் மற்றும் மூட்டுகளைப் பாதிக்கும் வாதக் காய்ச்சல் (Rheumatic fever) ஒரு தீவிர ஆனால் அரிதாக ஏற்படக்கூடிய சிக்கலாகும். பாக்டீரியா தொற்றினைக் குறைக்க நுண்ணுயிர் கொல்லிகள் உதவும் ஆனால் அவை வயிற்றுப்போக்கு தடிப்பு மற்றும் பிற பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். மற்றும் மருந்துக்கு சமூக எதிர்ப்புத்தன்மை ஏற்படலாம்.
ஆய்வு பண்புகள்
12,835 தொண்டைப்புண் நோயாளிகள் உள்ளடங்கிய 27 ஆய்வுகள் கொண்ட இந்த திறனாய்வு ஜூலை 2013 நிலவரப்படியானது . சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகள் அனைத்தும் சமவாய்ப்பு கட்டுப்பாட்டு, மருந்தற்ற குளிகை கொண்ட கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள்ஆகும். இந்த ஆய்வுகள் நுண்ணுயிர்க் கொல்லிகள் தொண்டை புண், காய்ச்சல், தலைவலி,போன்ற நோய்க்குறிகளைக் குறைக்குமா அல்லது அதற்கு மேற்பட்ட தீவிர சிக்கலான நிகழ்வுகளை குறைக்க உதவுமா என்று தீர்மானிக்க முனைந்தன. ஆய்வுகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் நடத்தப்பட்டன.
முக்கிய முடிவுகள்
நுண்ணுயிர்க் கொல்லிகள் வலி அறிகுறியின் காலத்தை சராசரியாக ஒரு நாள் குறைக்கின்றன என்று இந்த திறனாய்வு கண்டறிந்தது மற்றும் இந்த பிரச்சனை அதிகம் காணப்படும் சமூகங்களில் மூன்றில் இருவருக்கு வாதக் காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. தொண்டை புண் தொடர்புடைய பிற சிக்கல்களும் நுண்ணுயிர்க் கொல்லி பயன்படுத்துவதன் மூலம் குறைக்கப்படுகின்றன.
சான்றின் தரம்
நுண்ணுயிர்க் கொல்லிகள் வலி அறிகுறியின் காலத்தை சராசரியாக ஒரு நாள் குறைக்கின்றன என்று இந்த திறனாய்வு கண்டறிந்தது. மற்றும் இந்த பிரச்சினை அதிகம் காணப்படும் சமூகங்களில் மூன்றில் இருவருக்கு வாதக் காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. தொண்டை புண் தொடர்புடைய பிற சிக்கல்களும் நுண்ணுயிர்க் கொல்லி பயன்படுத்துவதன் மூலம் குறைக்கப்படுகின்றன.
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். குழு