உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கபடுகிறார்கள். பெரும்பாலான பக்கவாதம் மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக நடைபெறும். மூளைக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் இருந்தால், விரைவில் நிரந்தர மூளை சேதம் ஏற்படலாம். பக்கவாதத்தால் கை அல்லது கால் பலவீனம் ஏற்படலாம், அல்லது பேச்சு அல்லது பார்வை கஷ்டங்களை ஏற்படுத்தும். பக்கவாதம் சில நேரங்களில் அபாயகரமானது. ஆனால் அனேக நேரங்களில் உயிர்தப்பியவர்களால் அவர்கள் வழக்கமாக செய்து கொண்டிருந்த காரியங்களை செய்ய முடியாமல் போய்விடும். பக்கவாதம் பொதுவானது மற்றும் மேல்கண்ட சேதங்களை ஏற்படுத்தும் என்பதால் ஆராய்ச்சியாளர்கள் பக்கவாதம் ஏற்பட்ட பிறகு விரைவில் இரத்த உறைவுகள் விடுபட வழிகளை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். இதை செய்ய ஒரு வழி இரத்த உறைவு எதிர்ப்பிகள் என்று அழைக்கப்படும் இரத்தத்தை மெலிவு படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்துவதாகும் . இரத்த உறைவு எதிர்ப்பிகள் வேலை செய்தால், பக்கவாதத்தால் ஏற்படும் மோசமான விளைவுகள் தவிர்க்கபடலாம். இரத்த உறைவு எதிர்ப்பிகளின் முக்கிய பிரச்சினை அவை இரத்த போக்கினை ஏற்படுத்தும்; சிலநேரங்களில் இரத்த போக்கால் மிகவும் ஆபத்து ஏற்படும். பக்கவாதம் ஏற்பட்ட மக்களுக்கு விரைவில் இரத்த உறைவு எதிர்ப்பு சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்கள் குணம் அடைந்தார்களா இல்லையா மற்றும் அதனால் இரத்த போக்கு போன்ற பிரச்சினை ஏற்பட்டதா என்பதை அறிய இந்த முறையான திறனாய்வு வடிவமைக்கபட்டது . இந்த திட்டமிட்ட மறுஆய்வில் நிறைய தகவல்கள் உள்ளன- இந்த கேள்விக்கு விடை அளிக்க பக்கவாதம் கொண்ட 23,748 நபர்கள் 24 சமவாய்ப்பிட்ட பரிசோதனையில் சேர்க்கப்பட்டுள்னர். இரத்த உறைவு எதிர்ப்பு சிகிச்சை செய்து கொண்ட மக்களுக்கு குறைந்த நீண்ட கால இயலாமை ஏற்படவில்லை. மற்றும் அதிக இரத்த போக்கை அனுபவித்தனர். இரத்த கால்கள் அல்லது நுரையீரல்களில் இரத்த உறைவு ஏற்படும் வாய்ப்பு உறைவு எதிர்ப்பு சிகிச்சையினை எடுத்துக் கொண்ட மக்களுக்கு அவர்கள் குறைந்தது , ஆனால் இந்த நன்மைகள் இரத்தப்போக்கு அதிகரித்தவர்களின் எண்ணிக்கை கூடியதன் மூலம் ஈடுசெய்யபடுகிறது . இரத்த உறைவு எதிர்ப்பிகளின் தொடக்க உபயோகத்தினால் இரத்த கட்டியினால் ஏற்படும் பக்கவாதத்தில் ஒட்டுமொத்த பயனுள்ளது என்றுகூற எந்த ஆதாரமும் இந்த மறுஆய்வில் வழங்க முடியவில்லை. இரத்த போக்கு சிக்கல்களைச் சந்திக்காமல் இரத்த உறைவு எதிர்ப்பு சிகிச்சைக்கு பயனடையும் பக்கவாதம் உள்ள மக்களை தேர்ந்தெடுக்கும் வழி முறைகள் உள்ளனவா என அறிய மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.
மொழிபெயர்ப்பு: இ. நவீன் மற்றும் சி.இ.பி.என்.அர். குழு