கர்ப்பிணி பெண்கள் கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ் எடுத்துக் கொண்டால் பிறக்க போகும் குழந்தையின் வளர்ச்சி மேம்படும் என்பதை காட்ட ஆதாரம் இல்லை. இதற்கு மேலும் ஆராய்சிகள் தேவை.
செல்களின் கால்சியம் உட்கொள்ளுதலை அதிகப்படுத்தி கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ் மருந்து தசைகளை தளரச்செய்து மற்றும் இரத்த அழுத்ததை குறைக்கும். கர்ப்பிணி பெண்கள் கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ் எடுத்துக் கொண்டால் கருவில் மெதுவாக வளரும் பிறக்க போகும் குழந்தையின் (கரு வளர்ச்சி குறைபாடு) வளர்ச்சி மேம்படும் என்று நம்பப்படுகிறது. இந்த திறனாய்வு கர்ப்பிணி பெண்கள் கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ் எடுத்துக் கொண்டால் பிறக்க போகும் குழந்தையின் வளர்ச்சி மேம்படும் என்பதை காட்ட மிக சிறிய ஆதாரங்களை மட்டுமே கண்டது. 100 பெண்கள் கொண்ட ஒரு ஆய்வு மட்டுமமே இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும்,சில குழந்தைகளின் வளர்ச்சியை தூண்டும் என்பதற்கு சிறிய அளவிலான ஆதாரம் உள்ளது.மேலும் புகைப்பவர்கள் மற்றும் புகைக்காதவர்கள் இடையே அவர்களின் குழந்தையின் மீது இந்த மருந்துகளின் திறனை பற்றிய ஆராயிச்சிகள் தேவை.
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு