இந்த திறனாய்வு 12 சோதனைகளை கொண்டுள்ளது (3243 பெண்கள்). பிள்ளைப்பேற்றின் முதல் கட்டத்தில் தண்ணீரில் மூழ்குதல், பிள்ளைப்பேற்றின் நேர அளவு, அறுவை சிகிச்சை வீதங்கள் அல்லது பச்சிளங் குழந்தையின் நலம் எதையும் பாதிக்காமல், தண்டுவட வலியின்மை மருந்துகளுக்கான தேவையை குறிப்பிடத்தகுந்த வகையில் குறைத்தது. பிள்ளைப்பேற்றின் இரண்டாம் கட்டத்தில் தண்ணீரில் மூழ்குதல், பிள்ளைப்பேற்றின் அனுபவங்கள் மீதான பெண்களின் திருப்தியை அதிகரித்தது என்று இன்னொரு சோதனை காட்டியது. பச்சிளங் குழந்தை மற்றும் தாயின் நோயுற்ற விகிதத்தின் மீது தண்ணீரில் மூழ்கியபடி பிள்ளை பெறுதலின் விளைவை மதிப்பிட மேற்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. பிள்ளைப்பேற்றின் மூன்றாம் கட்டத்தில் தண்ணீரில் மூழ்குதல், அல்லது வெவ்வேறு விதமான தொட்டிகள் ஆகியவற்றை மதிப்பிட்ட எந்த சோதனைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்