நுரையீரல் மற்றும் இதயத்திற்கு இடையே உள்ள ஒரு இரத்தக்குழல் குழந்தை பிறந்தவுடன் மூடாமல் திறந்து இருப்பதால் திறந்த தமனி நாளம் Patent ductus arteriosus (PDA) ஏற்படுகிறது.இவ்வாறான பிடிஏ(PDA) உள்ளள குறைப்பிரசவ குழந்தைகளுக்கு கடுமையான நோய் மற்றும் மரணம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இண்டோமெதேசின் பொதுவாக குறைப்பிரசவ குழந்தைகளுக்கு தசை மற்றும் எலும்பு வலியை குறைக்க பயன்படுத்தப்படும் ஒரு மருந்து. இவை குறைப்பிரசவ குழந்தைகளுக்குபிடிஏ(PDA) மூடுவதற்கு உதவலாம். இந்த ஆய்வு பிறந்த பிறகு முதல் நாள் அனைத்து குறைப்பிரசவ குழந்தைகளுக்கும் (குறிப்பாக மிகவும் குறைப்பிரசவ குழந்தைகளுக்கு) இண்டோமெதேசின் கொடுப்பது பிடிஏ(PDA) உருவாகும் அபாயம் மற்றும்அதனுடன் தொடர்புடைய சிக்கல்களை (மூளை இரத்தப்போக்கு காரணமாக மூளை பாதிப்பு உள்ளிட்ட) குறைக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டது. குறுகிய கால விளைவுகள் இருந்தாலும், இண்டோமெதேசின் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் அல்லது நீண்ட கால இயலாமையை குறைக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும்இல்லை என ஆய்வுகள் .கண்டறிந்தன
மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு.