வாதம் அல்லாத ஊற்றறை குறு நடுக்கம் (nonrheumatic atrial fibrillation ) மற்றும் அண்மைகால பெருமூளை குருதிஓட்டத் தடை உள்ள நோயாளிகளுக்கு இரண்டாவது முறை பக்கவாதம் வராமல் தடுக்க உறைவு எதிர்ப்பிகள் (anticoagulants) நன்மை பயப்பவையாகவும் பாதுகாப்பானவையாகவும் உள்ளன. வாத அல்லா (nonrheumatic) ஏட்ரியக் குறு நடுக்கம் (NRAF) பக்கவாதம் நோயாளிகளில் பொதுவாக காணப்படும் ஒரு இதய ஒழுங்கோசை கோளாறு. இதான் காரணமாக இதயத்தின் இடது ஊற்றறையிலும் ஒரு குருதியுறை ஏற்படுத்தும். இந்த உறைவு, பிரிந்து சென்று ஒரு பெருமூளை தமனியை அடைத்து பக்கவாததிற்கு காரணமாக இருக்கலாம். NRAF உள்ள ஒரு பக்கவாதம் நோயாளிகளுக்கு மற்றொரு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. வார்ஃபாரின் போன்ற உறைவெதிர்ப்பி மருந்துகள், இரத்தத்தை நீர்த்து இரத்த கட்டிகள் உருவாவதைத் தடுப்பதன் மூலம் பக்கவாதத்தைத் தடுக்க முடியலாம். எனினும், உறைவெதிர்ப்பி மருந்துகள் மூளையில் இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம். இந்த சிக்கல் அதன் நன்மைகளுக்கு எதிரிடையாக அமைந்து விடலாம். பக்கவாதம் கொண்டிருந்த NRAF நோயாளிகளுக்கு உறைவெதிர்ப்பி சிகிச்சை எடுத்துக்கொண்ட இரண்டு சோதனைகளை இந்த திறனாய்வு அடையாளம் கண்டது. இந்த ஆய்வுகள் மண்டையோட்டுக்கு வெளியே அதிக இரத்தப்போக்கினை ஏற்படுத்த மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்புகள் இருப்பினும் உறைவு எதிர்ப்பிகள் பாதுகாப்பாக மீண்டும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என்று காட்டுகிறது. மண்டையோட்டுக்குள்ளே இரத்தப்போக்கு ஆபத்துக்கூறை இந்த இடர்பாடுகள் அதிகமாக்கவில்லை.
மொழிபெயர்ப்பு: சி.இ. பி. என்.அர்.