ஊற்றறைக் குறு நடுக்கம் உள்ளவர்களில் இரண்டாவதுமுறை பக்கவாதம் வருவதைத் தடுப்பதில் உறைவு எதிர்ப்பிகள் இரத்த வட்டு எதிர்ப்பி மருந்துகளைவிட திறனானது. வாதம் அல்லாத ஊற்றறைக் குறு நடுக்கம் (NRAF) பக்கவாத நோயாளிகளில் பொதுவாக காணப்படும் ஒரு இதய ஒழுங்கோசை கோளாறு. NRAF கொண்ட நோயாளிகள் ஒழுங்கற்ற இதயத் துடிப்புடன் இருப்பர். இதன் காரணமாக இதயத்தின் இடது ஊற்றறையில் ஒரு குருதியுறை ஏற்படலாம். இந்த உறைவு, பிரிந்து சென்று ஒரு பெருமூளை தமனியை அடைத்து பக்கவாதத்திற்குக் காரணமாக இருக்கலாம். NRAF உள்ள ஒரு பக்கவாத நோயாளிக்கு மற்றொரு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. வார்ஃபாரின் போன்ற உறைவெதிர்ப்பி மருந்துகள், இரத்தத்தை நீர்த்து இரத்த கட்டிகள் உருவாவதை தடுப்பதன் மூலம் பக்கவாதத்தைத் தடுக்க முடியலாம். எனினும், உறைவெதிர்ப்பி மருந்துகள் மூளையில் இரத்தப்போக்கினை ஏற்படுத்தலாம். இந்த சிக்கல் அதன் நன்மைகளை எதிரிடையாக ஆக்கிவிடலாம். ஆஸ்பிரின் ஒரு பாதுகாப்பான மாற்றாக இருக்கலாம். பக்கவாதம் கொண்டிருந்த NRAF நோயாளிகளுக்கு இரத்த வட்டு எதிர்ப்பி மருந்துகள் சிகிச்சை அல்லது உறைவெதிர்ப்பி மருந்துகள் எடுத்துக்கொண்ட இரண்டு சோதனைகளை இந்த திறனாய்வு அடையாளம் கண்டது. உறைவு எதிர்ப்பிகள் இரத்த வட்டுஎதிர்ப்பி மருந்துகளை விட மீண்டும் மீண்டும் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும் என்று இந்த ஆராய்ச்சிகள் கூறின.
மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர்