அதிக காலங்களுக்கு மனக்குழப்ப நீக்கி மருந்துகளை எடுத்துக் கொள்வது முகம் மற்றும் வாய் பகுதிகளில் தொடர்ச்சியான அசைவுகளை ஏற்படுத்தக் கூடும். அவை விகாரமாக காட்சியளிக்கும் மற்றும் மருந்தை குறைத்தால் அல்லது நிறுத்தினால் நின்று போகாது. இந்த இயக்க கோளாறுகளுக்கு வைட்டமின் E கொண்டு சிகிச்சையளிக்கப்படுவது பற்றி ஆராயப்பட்டுள்ளது. ஆனால், இது வரை, இந்த மருந்தின் விளைவு மிக சிறிதாகவே தெரிகிறது மற்றும் மோசமாகுதலை தவிர்ப்பதில் வரம்பிற்குட்பட்டுள்ளது.
If you found this evidence helpful, please consider donating to Cochrane. We are a charity that produces accessible evidence to help people make health and care decisions.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்