நாள்பட்ட மன நோய்களுக்கான வாழ்க்கைத் திறன்கள் திட்டங்கள்

ஒரு மனநல பிரச்சினையோடு இருப்பது, சலவை செய்தல், பொருள் வாங்கக் கடைக்குச் செல்லுதல், மற்ற மக்களுடன் வெளிப்படையாக பேசுதல், பல்துலக்குதல், வீட்டை சுத்தம் செய்தல், பணத்தை நிர்வகித்தல், நண்பர்களை ஏற்படுத்தி கொள்ளுதல், சவரம் செய்தல் மற்றும் பிறரை சார்ந்திராமல் இருத்தல் போன்ற எளிதானவற்றில் கூட, வாழ்கையின் அனைத்து பகுதிகளிலும் சிரமங்கள் மற்றும் தடைகளை ஏற்படுத்தக் கூடியது.பல ஆன்டிசைகாடிக் மருந்துகளால் ஏற்படும் மெல்லிய தூக்கம்-போன்றதோடு இணைந்து ஒரு மனநல பிரச்சினை இருப்பது, மக்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொள்ளும் திறனை, மற்ற மக்களுடன் பழகுதலை, கல்வி அல்லது தொழில் வளர்ச்சியில் பங்கெடுத்தலை, மற்றும் வேலை தேடுதலை கட்டுப்படுத்துகிறது

வாழ்க்கைத் திறன்கள் திட்டங்கள் பிறர் சார்பற்ற வாழ்க்கையை ஊக்குவித்து, அதனால் வாழ்க்கை தரத்தை அதிகரிப்பதன் மூலம் இந்த சில சிரமங்களை சரிசெய்ய முயற்சி செய்கின்றன.வாழ்க்கைத் திறன்கள் பெரும்பாலும் பல கூறுகளை கொண்டுள்ளன: தகவல் தொடர்பு மற்றும் பேசுதல்; நிதி விழிப்புணர்வு மற்றும் பணம் மேலாண்மை; வீடு சார்ந்த பணிகள் (சமையல், பாத்திரங்கள்-கழுவுதல், இயந்திரம் மூலம் தரையை சுத்தம் செய்தல், சலவை செய்தல்,மற்றும் ஒரு வீட்டை இயக்குதல் போன்ற); மற்றும் தனிப்பட்ட சுய-பராமரிப்பு (சலவை செய்தல், குளித்தல், பற்களை சுத்தம் செய்தல், சவரம் செய்தல், தலை சீவுதல் மற்றும் உடையணிதல் போன்ற).பிற வாழ்க்கைத் திறன்கள், மன அழுத்தத்தை சமாளித்தல், கடைக்கு சென்று பொருள்கள் வாங்குதல், மற்றும் ஆரோக்கியமான உணவு உண்ணுதல், நேரம் அறிதல், மருந்து உட்கொள்ளுதல், சமூக திறமைகளை மேம்படுத்தி கொள்ளுதல், போக்குவரத்தை பயன்படுத்தி கொள்ளுதல் மற்றும் முன்னோக்கி திட்டமிடல் ஆகியவற்றின் மேலான பயிற்சியையும் உள்ளடக்கும்.

புனர்வாழ்வு அல்லது நல்லவிதமாக முன்னேறுவது, மெதுவாக, சிக்கலாக, மற்றும் கடினமானதாகவும் உள்ளது. இந்த செயல்பாட்டின் போது மக்களோடு ஈடுபடுவதற்கு பல வழிகள் உள்ளன: ஆக்கபூர்வமான சிகிச்சைகள் (கலை, நாடகம், இசை, கவிதை, கல்வி, நடனம், பாடல்); வாழ்க்கை திறன்கள் (மேற்கூறியது போல); வேலைவாய்ப்பை அதிகரிக்க வேலை-சார்ந்த சிகிச்சை; மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் (குழு நடைகள், நீச்சல், விளையாட்டு, வாசித்தல், ஒரு நாட்குறிப்பு எழுதுதல், தொலைக்காட்சி பார்த்தல், விழாக்கள், நிகழ்வுகள் மற்றும் நாள் பயணங்களுக்கு போகுதல் போன்ற)

மன நல பிரச்னைகளை கொண்ட மக்களுக்கான பல்வேறு வகையான மறுவாழ்வு சிகிச்சை முறையை இந்த திறனாய்வு காண்கிறது. இது, தொழில்சார் சிகிச்சை மற்றும் சமமானவர் ஆதரவு (மன நல பிரச்னைகள் கொண்ட மக்கள் குழு தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவிட ஊக்கமளித்தல்) ஆகியவற்றோடு வாழ்க்கை திறன்கள் பயிற்சியை ஒப்பிடுகிறது.நிலையான அல்லது வழக்கமான பராமரிப்போடும் ஒப்பீடு செய்யப்பட்டது.வாழ்க்கை திறன்கள், தொழில்சார் சிகிச்சை மற்றும் சமமானவர் ஆதரவு அனைத்தும் அர்த்தமுள்ள மற்றும் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளை செய்ய மக்களை இயக்குவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்த நோக்கம் கொண்டுள்ளன.

முக்கியமாக, வாழ்க்கை திறன்கள், தொழில்சார் சிகிச்சை, சமமானவர் ஆதரவு, மற்றும் நிலையான பராமரிப்பு பெற்றவர்கள் இடையே எந்த பெரிய வித்தியாசமும் இல்லை என்று இந்த திறனாய்வு ஆசிரியர்கள் முடிவு செய்தனர். மக்கள் வாழ்க்கை திறன்களில் கலந்து கொள்ள வலியுறுத்தப்பட வேண்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது மற்றும் வாழ்க்கை திறன்கள் நன்மையா அல்லது ஒருவேளை கேடு விளைவிப்பவையா என்பதும் தெரியாததாகும்.தொழில் வல்லுநர்கள் மற்றும் சேவை பயனர்கள் வாழ்க்கைத் திறன்கள் மேல் அதிக நேரம் முதலீடு செய்கின்றனர் மற்றும் இது, நேரம் மற்றும் பணம் இரண்டிற்கான செலவையும் கூட்டும்.எனினும், அறிவியல் சான்றின் தரம் குறைந்ததாகவும் மற்றும் கேள்விக்குறியாகவும் உள்ளது.கிட்டத்தட்ட, மனநல பிரச்சினைகளால் முடக்கப்பட்ட மக்கள் பெரும் நன்மைகளை பெற்று கொள்ள, இன்றும் வாழ்க்கை திறன்கள் ஒரு எளிய மற்றும் சுலபமான வழியாக சாத்தியமளிக்கிறது என்பதை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த எளிய மொழிச் சுருக்கம் ரீதின்க் மெண்டல் இல்னஸ்-சை சேர்ந்த பென் கிரே என்பவரால் தயாரிக்கப்பட்டது: பெஞ்சமின் கிரே, சேவை பயனர் மற்றும் சேவை பயனர் நிபுணர், ரீதின்க் மெண்டல் இல்னஸ். மின்னஞ்சல்: ben.gray@rethink.org

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information