சிக்கல் அற்ற மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிக்க தனியாக சல்ஃபோடாக்சின்-பைரிமெத்தமைன் உபயோகிப்பதற்கு பதிலாக சல்ஃபோடாக்சின்-பைரிமெத்தமைனுடன் அமோடியகுயின் சேர்த்து உபயோகிப்பது சிகிச்சை தோல்வியைக் குறைக்கலாம். சல்ஃபோடாக்சின்-பைரிமெத்தமைனுடன் குளோரோக்யூன் சேர்த்துசிகிச்சை அளிப்பதால் நன்மை ஏதும் இல்லை.
குளோரோகுயின், அமோடியகுயின் மற்றும் சல்ஃபோடாக்சின்-பைரிமெத்தமைன் (sulfadoxine-pyrimethamine) போன்ற மருந்துகள் மலேரியா சிகிச்சைக்கு ஒப்பீட்டளவில் மலிவானவை. இந்த மருந்துகள் தனியாக பயன்படுத்தப்படும் போது சிகிச்சை தோல்வி ஒரு பிரச்சினையாகிறது ஏனெனில் மலேரியா ஒட்டுண்ணிகள் அவைகளுக்கு எதிர்ப்பு சக்தி உள்ளவையாக ஆகிவிடுகின்றன . குளோரோகுயின், அமோடியகுயின் உடன் சேர்த்து சல்ஃபோடாக்சின்-பைரிமெத்தமைன் (sulfadoxine-pyrimethamine) சிகிச்சை அளிப்பது சில இடங்களில் நன்மை பயக்கும் என்று சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனையில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் கூறுகின்றன க்ளோரோக்யூன் பிளஸ் சல்ஃபோடாக்சின்-பைரிமெத்தமைன் சிகிச்சையில் தனியாக சல்ஃபோடாக்சின்-பைரிமெத்தமைன் சிகிச்சையைக் காட்டிலும் நன்மை உள்ளது என்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு