கீழ் முதுகு வலிக்கான ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் (Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs)).

ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் (Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs), உலகளவில் அடிக்கடி பரிந்துரைக்கப்படும் மருந்துகளாக இருக்கின்றன. இவை பொதுவாக கீழ் முதுகுவலிக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த திறனாய்வு, வெவ்வேறு NSAID-களை மருந்தற்ற குளிகைகளுடனும் (சிகிச்சை மதிப்பு ஏதும் இல்லாத ஒரு செயலற்ற பொருள் ), மற்ற மருந்துகள், சிகிச்சை முறைகள் , மற்றும் பிற NSAID- ஆகியவற்றுடனும் ஒப்பிட்ட வேறுபட்ட தர ஆராய்ச்சி முறைகளை கொண்ட 65 ஆய்வுகளை ( 11000 நோயாளிகளுக்குமேல் உள்ளடக்கியது ) கண்டறிந்தது. கடுமையான மற்றும் நாள்பட்ட, சயாட்டிக்கா (sciatica) (வலியும் கூச்சமும் கால்களுக்கு பரவக்கூடிய) இல்லாத கீழ் முதுகு வலிகளுக்கு குறுகியகால நோய்க்குறி நிவாரணத்திற்கு NSAIDகள் ஓரளவு செயலாற்றல் கொண்டுள்ளதென இந்த திறனாய்வின் முடிவு கூறுகிறது. கடுமையான சயாட்டிக்காவுடன் உள்ள நோயாளிகளுக்கு மருந்தில்லா குளிகைகளுக்கும் NSAIDகளுக்குமிடையே ஒப்பிடும்போது நிவாரணத்தில் எந்த வித்தியாசமும் காணப்படவில்லை.

மேலும் இந்த திறனாய்வின் ஆசிரியர்கள், NSAIDs மற்ற மருந்துகளைவிட (பாராசிடமால் (paracetamo)l/அசிடமிநோபின் (acetaminophen), உணர்ச்சியகற்றி வலி நிவாரணிகள் மற்றும் தசைதளர்த்திகள்) கூடுதல் செயல் திறன் கொண்டிருக்கவில்லை என்பதை கண்டனர். NSAIDகள் உணர்ச்சியகற்றி வலி நிவாரணிகள் மற்றும் தசைதளர்த் ர்திகளைக் காட்டிலும் குறைந்த பக்க விளைவுகளைக் கொண்டிருந்தாலும், மருந்தற்ற குளிகைகள் மற்றும் பாராசிடமால் (paracetamol) /அசிடமிநோபின் (acetaminophen) ஆகியவை NSAIDகளைக்காட்டிலும் குறைந்த பக்க விளைவுகளை கொண்டிருந்தன. புதிய COX-2 NSAIDகள் பாரம்பரிய NSAIDகளை விட கூடுதல் செயல்திறரனுடையதாக தெரியவில்லை, ஆனால் அவை குறைவான பக்க விளைவுகளுடன்- குறிப்பாக வயிற்று புண்களுடன் - தொடர்புடையதாக இருந்தன. எனினும் ஏனைய அறிவியல் இலக்கியங்கள்(மருத்துவ குறிப்புகள்) COX-2 NSAIDகளை அதிக இதய இரத்தநாள ஆபத்துகளுடன் தொடர்புடைய தாக காட்டியுள்ளன.

இந்ததிறனாய்வு ஆராய்ச்சிகளில் அதிக எண்ணிக்கையில் குறைபாடுகளை கண்டறிந்து. 42% ஆய்வுகள் மட்டுமே உயர் தரமுடையதாக கருதப்பட்டது. பல ஆய்வுகள் குறைந்த எண்ணிக்கையில் நோயாளிகளை கொண்டிருந்ததால், NSAIDகளுக்கும் கட்டுப்பாட்டு குழுக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை கண்டறியும் திறனை குறைத்தன. நீண்ட கால முடிவுகள் பற்றியும், நீண்ட கால பக்கவிளைவுகள் பற்றியும் குறைந்த தகவல்களே இருக்கின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இர .செந்தில் குமார் & மு. கீதா, மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information