புகைப்பிடித்தலை விடுவதற்கு உதவ, வெறுப்பூட்டும் வகையில் புகைப்பது ஒரு வழியாக இருக்குமா?

வெறுப்பூட்டு சிகிச்சை முறைகள் என்பது விரும்பத்தகாத நடத்தைகளோடு எதிர்மறையான உணர்ச்சிகளை ஒருங்கிணைக்கும் சிகிச்சை முறைகளாகும். புகைப்பிடித்தலை விடுவதற்கு, புகைபிடிப்பவர்கள் புகைப்பதை வெறுக்கும் அளவிற்கு ஒவ்வொரு சில வினாடிகளுக்கும் புகையை உள்ளிழுத்து அதிவேகமாக புகைப்பது போன்ற அணுகுமுறைகள் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது திறன் மிக்கவையாக இருக்குமென்று கிடைக்கப்பெறும் சோதனைகளின் முடிவுகள் கூறினாலும், இந்த அணுகுமுறையை கொண்ட பெரும்பாலான ஆய்வுகள் செயல்முறையியல் பிரச்னைகளைக் கொண்டிருந்ததால், நிலையற்ற ஆதாரமே உள்ளது. ஒரு சமீபத்திய ஆய்வகம் சார்ந்த ஆராய்ச்சியும் இந்த அணுகுமுறை ஒரு செயல் மிகுந்த உட்கூற்றை கொண்டுள்ளது என பரிந்துரைக்கிறது. மேற்படியான ஆராய்ச்சி மேலும் மதிப்பு கொண்டதாக இருக்கும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information