பெரும்பசி நோய் மற்றும் அதிகப்படியாக உண்ணுதலுக்கு உளவியல் சிகிச்சைகள்

பெரும்பசி நோய் (புளூமியா நெர்வோஸா) என்பது மக்கள் அதிகப்படியாக உணவை உண்டு பின்னர் அதனை சரி செய்ய தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வது, மலமிளக்கிகள் எடுத்துக் கொள்வது அல்லது உண்ணாமல் இருப்பது போன்ற உச்சக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு விதமான உண்ணுதல் குறைப்பாடாகும். புலனறிவு நடத்தை சிகிச்சை என கூறப்படும் ஒரு குறிப்பிட்ட உளவியல் சிகிச்சையை உள்ளடக்கிய பல்வேறு உளவியல் சிகிச்சைகளை ஆராய்ந்த ஆய்வுகளை நாங்கள் திறனாய்வு செய்தோம். உளவியல் சிகிச்சையை எந்த சிகிச்சையும் பெற்றுக் கொள்ளாத கட்டுப்பாட்டு குழுக்களோடு (உதாரணத்திற்கு: காத்திருப்போர் வரிசை பட்டியலில் இருந்த மக்கள்), மற்றும் பிற வகையான உளவியல் சிகிச்சைகளை புலனறிவு நடத்தை சிகிச்சையோடு ஒப்பிட்டோம். பிற சிகிச்சைகள் மற்றும் சிகிச்சையின்மையோடு ஒப்பிடுகையில் அதிகப்படியாக உண்ணுவதை குறைப்பதில்புலனறிவு நடத்தை சிகிச்சை சிறந்ததாக இருந்ததென்று நாங்கள் கண்டோம். சிகிச்சையின்மையோடு ஒப்பிடுகையில், பிற சிகிச்சைகளும் அதிகப்படியாக உண்ணுவதை குறைப்பதில் சிறந்ததாக இருந்ததென்று நாங்கள் கண்டோம். புலனறிவு நடத்தை சிகிச்சை கையேட்டை பயன்படுத்தி சுய-உதவி பெற்று கொள்வது பயனுள்ளதாக இருக்குமென்று சில ஆய்வுகள் கண்டன. எனினும், அதிகப்படியான ஆராய்ச்சி மற்றும் பெரியளவிலான சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information