திறனாய்வு கேள்வி
நீண்ட கால முதுகு வலி உடையவர்களுக்கு பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு சிகிச்சை அளிப்பது பயனுள்ளதா?
பின்புலம்
கீழ் முதுகு வலி (LBP) என்பது பெரும் வலியையும் உலகளாவிய துயரத்தையும் தரவல்லதான நிலைமைக்குக் காரணமாகிறது . மேலும் சுகாதார செலவு மற்றும் வேலைக்கு செல்லாமை காரணமாக சமூகத்தின் பெரிய செலவுகளுக்கும் காரணமாக உள்ளது. பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் தொடர்ந்திருக்கும் கீழ் முதுகு வலி ( LBP ) உளவியல் மற்றும் சமூக பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக உள்ளது என்று முந்தைய ஆராய்ச்சி காட்டியுள்ளது. பலமுனை சிகிச்சை, கீழ் முதுகு வலியின் (LBP)உடல் , உளவியல் மற்றும் சமுக பரிமாணங்களை இலக்காக கொண்டது..மற்றும் இது வேறுபட்ட பின்புலம் மற்றும் பயிற்சிபெற்ற சுகாதார குழுவை உள்ளடக்கியது.
ஆய்வு பண்புகள்
பெப்ரவரி 2014 வரை பிரசுரிக்கபட்ட ஆய்வுகளை நாங்கள் சேகரித்தோம்.இதில் பல்முனை சிகிச்சையை மற்ற சிகிச்சைகளுடன் ஒப்பிட்ட.41 ஆராய்ச்சிகள் (6858 பங்கேற்பளர்களை உள்ளடக்கிய) இருந்தன. பெரும்பாலான ஆய்வுகள் பல்முனை சிகிச்சையை வழக்கமான சிகிச்சையுடன் (ஒரு பொது மருத்துவர் வழங்கும் சிகிச்சை போன்ற) அல்லது உடல் ரீதியான காரணிகளுக்கு மட்டுமான சிகிச்சையுடன்(அதாவது உடற்பயிற்சி அல்லது இயன்முறை மருத்துவம் போன்ற) ஒப்பிட்டது. ஆராய்ச்சிகளில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் மூன்று மாதங்களுக்கு மேல் கீழ் முதுகு வலி (LBP ) இருந்தது மற்றும் அவர்கள் அதற்கு முன்பு வேறு சில வகையான சிகிச்சை பெற்று இருந்தனர்.
முக்கிய முடிவுகள்
வழக்கமான சிகிச்சை முறை அல்லது உடல் ரீதியான காரணிகளை இலக்காக கொண்ட சிகிச்சைகளை விட பல்முனை சிகிச்சை வலி மற்றும் தினசரி செயல்பாடுகளில் பெரியளவு முன்னேற்றத்தை கொடுக்கிறது என்பதற்கு மிதமான தரத்தில் ஆதாரங்கள் இருந்ததன . வேறுபாடுகள் பெரிய அளவில் இல்லை.பத்து புள்ளிகள் (10 point ) கொண்ட அளவுகோலில் ஒரு புள்ளி அளவே மாற்றம் இருந்தது என்றாலும் வேறு எந்த சிகிச்சையிலும் சரியாகாதவர்களுக்கு இது மிக முக்கியமாக இருக்கலாம். உடல் ரீதியான காரணிகளை இலக்காக கொண்ட சிகிச்சைகளுடன் ஒப்பிடும் போது பல்முனை சிகிச்சை அடுத்த 6 முதல் 12 மாதங்களில் நோயாளிகள் வேலை செய்ய இயலும் வாய்ப்பை இரண்டு மடங்காக்கியது.
இந்த திட்டங்கள் மாற்று சிகிச்சைகளை விட பயனுள்ளதாகத் தெரிகிறது இருந்தாலும் விளைவுகள் பணம், வளங்கள் மற்றும் நேரம் அடிப்படையில் செலவுகளுக்கு சமச்சீராக இருக்க வேண்டும். பல்முனை சிகிச்சை திட்டங்கள் பெரும்பாலும் தீவிரமானதும் அதிக செலவுடையதாகவும் உள்ளன. எனவே அவைகள் பெரும்பாலும் மிகவும் கடுமையான அல்லது சிக்கலான பிரச்சினைகள் உள்ள மக்களுக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளன.
மொழிபெயர்ப்பு: அழகுமூர்த்தி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு