நாள்பட்ட ஆஸ்துமாவிற்கு அலெக்சாண்டர் நுட்பம்

ஆஸ்துமாவின் போது, காற்றுக்குழாய்கள் குறுகி, மூச்சு விடுதலில் சிரமம், இழுப்பு மற்றும் இருமலை ஏற்படுத்தும். ஒவ்வாமைகள், மகரந்தத் துகள்கள், மனஅழுத்தம் அல்லது காற்று மாசுப்பாடு ஆகியவற்றால் ஆஸ்துமா ஏற்படலாம் மற்றும் உயிருக்கே ஆபத்தாய் முடியலாம். அலெக்சாண்டர் நுட்பம் என்பது, உடல் தோற்ற அமைவை சரிசெய்து, உடலினை இயற்கையான அமைப்பிற்கு கொண்டு வந்து மற்றும் இளைப்பாற்றலுக்கு உதவும் தொடர்ச்சியான இயக்கங்களைக் கொண்ட ஒரு விதமான சிகிச்சைமுறையாகும். ஆஸ்துமா கொண்ட மக்களுக்கு அவர்கள் மூச்சு விடுவதை மேம்படுத்த அலெக்சாண்டர் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்துமாவிற்கு மருந்து எடுத்துக்கொள்ளும் தேவையை குறைப்பதில் அலெக்சாண்டர் நுட்பத்தின் விளைவை காட்ட போதுமான ஆதாரம் இல்லையென சோதனைகளின் இந்த திறனாய்வு கண்டது. அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information