கர்ப்பக் காலத்தில் வாரிகோஸ் நாளங்கள் மற்றும் கால் திரவக் கோர்வைக்கான சிகிச்சை தலையீடுகள்

கர்ப்பக் காலத்தில் வாரிகோஸ் நாளங்கள் மற்றும் கால் திரவக் கோர்வைக்கான சிகிச்சைகளை பற்றி போதுமான ஆதாரம் இல்லை.

நாளப்புடைப்பு என்று சிலசமயங்களில் அழைக்கப்படும் வாரிகோஸ் நாளங்கள், இரத்தக் குழாய்களின் சுவர்களில் உள்ள ஒரு வால்வு பலவீனமடைவதால், இரத்தம் தேங்குவதன் மூலம் ஏற்படுவதாகும். இது தொடர்ச்சியாக, நாளங்களில் இரத்த ஓட்டக் கோளாறுகள் மற்றும் திரவக் கோர்வை அல்லது வீக்கத்திற்கு வழி வகுக்கும். அதினால், நரம்பு தொய்வுற்று, அதன் சுவர்கள் இழுபட்டு மற்றும் தொய்ந்து, தோலின் மேற்பகுதியில் நாளத்தை ஒரு சிறிய பலூன் போல வீங்கச் செய்யும். கால்களில் உள்ள நாளங்கள், புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படுவதால், மிக பொதுவாக அவை பாதிக்கப்படும், ஆனால் , யோனி மடி (யோனியின் வாய்) அல்லது ஆசனவாய் (மூல நோயை (பைல்ஸ்) ஏற்படுத்தி), ஆகியவையும் பாதிக்கப்படும். கர்ப்பக் காலம், வாரிகோஸ் நாளங்களின் அபாயத்தை அதிகரித்து, மற்றும் குறிப்பிடத்தகுந்த வலி, இரவு தசை இறுக்கங்கள், உணர்ச்சியின்மை, ஊசி குத்தல் உணர்வுகள், மற்றும் கால்கள் கனமாகவும், வலி மிகுந்ததாகவும் மற்றும் அழகற்றதகவும் ஏற்படுத்தும். பொதுவாக, வாரிகோஸ் நாளங்களுக்கான சிகிச்சைகளை மூன்று முக்கிய அணிகளாக பிரிக்கலாம்:மருந்தியல் சிகிச்சைகள், மருந்தில்லா சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை.  326 பெண்கள் கொண்ட ஏழு ஆய்வுகளை இந்த திறனாய்வு கண்டறிந்தது. ரூடோசைடு என்ற மருந்து அறிகுறிகளை குறைப்பதில் திறன் கொண்டதாக இருந்தது என்று பரிந்துரைக்க மிதமான தர ஆதாரம் இருக்கும் போதிலும், அந்த ஆய்வு மிக சிறிதாக இருந்த படியால், உண்மையான நம்பிக்கையோடு அதை சொல்ல முடியவில்லை. அதே போன்று,அனிச்சை செயலியல் சிகிச்சை (ரிப்லக்ஸ்சாலாஜி), மற்றும் நீர் மூழ்குவிப்பு ஆகியவற்றை பொறுத்தவரை, அவற்றின் நன்மைகள் மற்றும் தீங்குகள் ஆகியவற்றை அளவிடுவதற்கு பற்றாக்குறையான தரவு இருந்தது, எனினும் அவை நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. அழுத்தக் கட்டு உரைகள் எந்த நலன்களும் கொண்டவையாக தெரியவில்லை. அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information