பின்புலம்
கருப்பையில் அல்லது பிறப்புக்கு பின்னர் மருத்துவமனையில் இருக்கும்போது, குறிப்பாக குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படும் போது தொற்று ஏற்படலாம். இத்தகைய தொற்று கடுமையான உடல்நலக்குறைவு அல்லது இறப்பை ஏற்படுத்தும். 32 கர்ப்ப கால வாரத்திற்குப் பின்னர் முக்கியமாக நோய் எதிர்ப்புப் புரதம் (இம்யூனோகுளோபின்ஸின்) (தொற்றை எதிர்த்து போராட கூடிய இரத்தத்தில் உள்ள பொருட்கள்) தாய்வழியாக கருவுக்கு சென்று அடையும் மற்றும் கைக்குழந்தைகள் பிறந்த பல மாதங்கள் வரை தங்கள் சொந்த நோய் எதிர்ப்புப் புரதம் (இம்யுனோக்ளோபுலின்ஸ்) உற்பத்தி தொடங்குவது இல்லை. கோட்பாட்டளவில், தொற்று ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகளைச் சிரை வழி நோய் எதிர்ப்புப் புரதம் (இம்யூனோக்ளோபுலின்) செலுத்துவது மூலம் குறைக்க முடியும்.
எங்கள் திறனாய்வு கேள்வி
பிறந்த குழந்தைகளில் ஐயத்திற்குரிய அல்லது நிரூபிக்கப்பட்ட தொற்றுக்கு , சிரை வழி நோய் எதிர்ப்புப் புரதம் (இம்யூனோக்ளோபுலின்) செலுத்தல் இறப்பு அல்லது உடல்நலக் குறைவை குறைக்குமா?
ஆராய்ச்சிகள் என்ன தெரிவித்தன
பல சிறிய அராய்ச்சிகள் போக , கூடுதலாக 3493 குழந்தைகள் பங்குபெற்ற ஒரு மிக பெரிய ஆராய்ச்சியும் வெளியிடப்பட்டது. சிரை வழி நோய் எதிர்ப்புப் புரதம் (இம்யூனோக்ளோபுலின்) அளிப்பது மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது இறப்பு அல்லது உடல்நலக் குறைவினையும், மற்றும் இரண்டுவயதில் முக்கிய இயலாமை தடுக்க முடியாது என்று கிடைத்திற்கும் அராய்ச்சிகளில் இருந்து தெளிவாக தெரிகிறது.
ஒட்டுமொத்தமாக
பிறந்த குழந்தைகளில் ஐயத்திற்குரிய அல்லது நிரூபிக்கப்பட்ட தொற்றுக்கு சிரை வழி நோய் எதிர்ப்புப் புரதம் (இம்யூனோக்ளோபுலின்) செலுத்தல் பரிந்துரைக்கப் படவில்லை. கூடுதலான ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கப் படவில்லை
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு