வயதான மக்களில் இடுப்பெலும்பு முறிவைத் தடுக்க இடுப்பு பாதுகாப்பான்கள்

இடுப்பு பாதுகாப்பான்கள் என்றால் என்ன?

செவிலிய பராமரிப்பு அமைப்புகள் அல்லது வீடுகளில் வசிக்கும் வயதான மக்கள் கீழே விழுவதற்கு அதிகமான அபாயத்தை கொண்டுள்ளனர், மற்றும் விழுந்த பின் அவர்களுக்கு இடுப்பெலும்பு முறிவு ஏற்படக் கூடும். இடுப்பு பாதுகாப்பான்கள் என்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளின் பாக்கெட்டுகளில் கடினமான பிளாஸ்டிக் கவசம் அல்லது மென்மையான போம் அட்டைகள் பொறுத்தப்பட்டிருப்பதாகும். இடுப்பெலும்பு மேல் பக்கவாட்டில் விழும் போது அதை பாதுகாக்க அணியப்படுவதாகும்.

அவை இடுப்பெலும்பு முறிவுகளைத் தடுக்குமா?

இடுப்பெலும்பு முறிவைத் தடுப்பதில் இடுப்பு பாதுகாப்பான்களின் விளைவை அறிய இந்த திறனாய்வை நடத்தினோம்.டிசம்பர் 2012 வரைக்குமான அனைத்து தொடர்புடைய ஆய்வுகளையும் நாங்கள் தேடினோம். சுமார் 80 வருடங்கள் வயதுடைய 17,000 மக்களைக் கொண்டிருந்த 19 ஆய்வுகளை நாங்கள் கண்டோம்.

ஒட்டுமொத்தமாக, ஆய்வுகளிலிருந்து, கீழ்கண்ட முடிவுகளுக்கு மிதமான தரம் கொண்ட ஆதாரமே உள்ளது.

செவிலிய பராமரிப்பு அமைப்புகளில் வாழும் வயதான மக்களில், இடுப்பு பாதுகாப்பான்களை அளிப்பது இடுப்பெலும்பு முறிவின் சாத்தியத்தை லேசாக குறைக்கலாம்- இடுப்புக் கூடு முறிவின் ஒரு சின்ன சாத்தியத்தை லேசாக உயர்த்தலாம், பிற எலும்பு முறிவுகள் அல்லது விழுதல்கள் மீது சிறிய அல்லது எந்த விளைவும் இல்லாமல் இருக்கலாம்.

வீடுகளில் வாழும் வயதான மக்களில், இடுப்பு பாதுகாப்பான்களை அளிப்பது இடுப்பெலும்பு முறிவுகள் மீது சிறிய அல்லது எந்த விளைவும் இல்லாமல் இருக்கலாம்.

இடுப்பு பாதுகாப்பான்களை அணியும் போது, வெகு சில மக்களே தோல் எரிச்சல் போன்ற பக்க விளைவுகளை கொண்டிருந்தனர். எனினும், இடுப்பு பாதுகாப்பான்கள் அளிக்கப்பட்ட போதிலும், பெரும்பான்மையான நேரங்களில் மக்கள் அதை அணியவில்லை. இடுப்பு பாதுகாப்பான்களை ஏற்று கொள்ளல் மற்றும் அணிவதை கடைப்பிடித்தல் போன்றவற்றின் மீது தாக்கமுடைய தனிமனித மற்றும் வடிவமைப்பு காரணிகள் பற்றி சிறப்பான புரிதல் வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information