ஆஸ்துமாக்கான சுவாசப் பயிற்சிகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பின்புலம்

ஆஸ்துமா நுரையீரலை பாதிக்கும் நோய், இதில் விலங்குகளில் இருந்து உதிரும் முடி,இறகு மற்றும் தோல் (danders) அல்லது மகரந்தம் போன்ற ஆஸ்துமா தூண்டிகளால் (இதனை மூச்சுக்குழாய் ஹைப்பர்ரெஸ்பான்சிவ்னஸை என அழைப்பர்) காற்று செல்லும் பாதையிலுள்ள சிறிய மூச்சுக்குழாய்களில் அழற்சி மற்றும் இறுக்கம் உண்டாகும். (சுவாசப்பாதையில் அடைப்பு என அழைக்கப்படும்). மருத்துவமனையில் சேர்ப்பது மற்றும் அதனால் ஏற்படும் செலவுகள் (அனுமதிக்கப்பட்ட செலவு மற்றும் மருந்தின் செலவு) காரணமாக உலகளவில் பரவலாக மக்களை பாதிக்கும் ஆஸ்துமா ஒரு பெரிய உடல்நல பிரச்னையாக உருவாகி உள்ளது. சுவாசப் பயிற்சிகள் ஒரு மருந்தற்ற சிகிச்சையாக உள்ள தலையீடாகும். இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வழக்கமான சிகிச்சையாக பயன்படுத்தப்படுகின்றது.சுவாசப் பயிற்சிகள், ஆஸ்துமா அறிகுறிகளான மிகை காற்றோட்டத்தை (அதிகமூச்சு) கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. இது பாப்வொர்த் செயல்முறை, புடிகோ சுவாச நுட்பம், யோகா அல்லது சுவாச அமைமுறையை மாற்றுவதின் மேல் நோக்கம் கொண்ட அதே மாதிரியான பிற செயல்முறைகளிலும் செயலாக்கப்படுகிறது.

திறனாய்வு கேள்வி

ஆஸ்துமா உள்ள பெரியவர்களுக்கு சுவாசப் பயிற்சிகளின் வினைவுறுதிறன் குறித்து கிடைக்கக் கூடிய ஆதாரங்களை காண நாங்கள் விரும்பினோம்.

முக்கிய முடிவுகள்

லேசான முதல் மிதமான ஆஸ்துமா கொண்ட 906 பெரியவர்களை உள்ளடக்கிய 13 ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். பதினொரு ஆய்வுகள் சுவாசப் பயிற்சியினை செயலற்று கட்டுப்பாட்டுகுழுக்களுடனும் இரண்டு ஆய்வுகள்ஆஸ்துமா பற்றின கல்வி கட்டுப்பாட்டு குழுக்களுடனும் செயல்படுத்தி ஒப்பிட்டன. ஒட்டுமொத்தமாக, வாழ்க்கை தரம், ஆஸ்துமா அறிகுறிகள் மற்றும் நோய் பண்பு மிகத்தல் போன்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை மேம்பட்டது. நுரையீரல் செயல்பாட்டு திறனை மதிப்பீடு செய்த 11 ஆய்வுகளில் 6ஆய்வுகள், சுவாசப் பயிற்சி செய்தவர்களுக்கு சாதகமாக குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது என்று தெரிவித்தன. இந்த சிகிச்சை எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப் படவில்லை. இது இந்த சிகிச்சை பாதுகாப்பானது மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் பொறுத்துக்கொள்ளகூடியது என்பதைக் காண்பிக்கிறது.

ஆதாரங்களின் தரம்

சுவாசப் பயிற்சி முறைகள், ஆய்வில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, சிகிச்சைகளின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை காலஅளவு, ஆய்வில் அறிவிக்கப்பட்ட விளைவுபயன் அளவீடு மற்றும் தரவு புள்ளிவிவர வழங்கல் போன்றவை இந்த ஆய்வுகளில் விதவிதமாக இருந்தன. இதன் விளைவாக, மெட்டா-பகுப்பாய்வு மூலமாக (ஒருங்கிணைத்தல்) இந்த சோதனைகளின் முடிவுகளை எங்களால் ஒப்பிட முடியவில்லை. இரு விளைவுகளுக்கு மட்டுமே (ஆஸ்துமா அறிகுறிகள் மற்றும் ஆஸ்துமா வாழ்க்கை தரம் கேள்விப்பட்டியல்— AQLQ) மெட்டா-பகுப்பாய்வு செய்யமுடிந்தது.இவை ஒவ்வொன்றும் இரண்டு ஆய்வுகளில்மட்டும் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மெட்டா-பகுப்பாய்வுகளும், குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது என்று சுவாசப் பயிற்சி செய்தவர்களுக்கு சாதகமாக தெரிவித்தன. ஆய்வுகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட செயல்முறைகள், நாம் விரும்புகிற வண்ணம் சிறப்பாக அறிக்கையிடப்படவில்லை. அதனால் சோதனைகளின் தரத்தை பற்றியும் தெளிவு இல்லை. ஒட்டுமொத்தமாக திறனாய்வுக்கு சேர்க்கப்பட்டுள்ள ஆதாரங்களின் தரம் மிகவும் குறைவாக இருந்தது.

முடிவுரை

ஆஸ்துமா உள்ள பெரியவர்களுக்கு (adults) சுவாசப் பயிற்சிகள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிலதனிப்பட்ட ஆய்வுகள் கூறியபோதும் இதன் பலாபலனை ஆதரிக்கவோ அல்லது ஆட்சேபிக்கவோ, முடிவான ஆதாரங்கள் இந்த திறனாய்வில் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சி.இ.பி.என்.ஆர் குழு