பின்புலம்
புகைப்பிடிப்பதை விடுவதற்கு முயலும் மக்களுக்கு உதவ, பொதுவாக தனிப்பட்ட கலந்தாய்வு பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ பராமரிப்பிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பயிற்சியளிக்கப்பட்ட சிகிச்சையாளர் அளிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேலான நேருக்கு நேர் அமர்வுகள் மூலம் வழங்கப்பட்ட கலந்தாய்வு சோதனைகளை இந்த திறனாய்வு பார்வையிட்டது. விளைவுபயன், குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்குப் பின்னர் புகைபிடிக்காதவராவர் என்பதே.
ஆய்வு பண்புகள்
நாங்கள், மே 2016ல் ஆய்வுகளைத் தேடி சுமார் 19,000 பங்கேற்பாளர்கள் சேர்க்கப்பட்ட 49 சோதனைகளைக் கண்டறிந்தோம். எல்லா ஆய்வுகளும் ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேருக்கு நேர் கலந்தாய்வு அமர்வுகளை உட்படுத்தியிருந்தன. அனைத்து ஆய்வுகளும் குறைந்தது 10 நிமிடமாவது நீடித்தது. சிலவற்றில் அதற்கு மேலும் நேருக்கு நேர் ஆலோசனை வழங்கல் சிகிச்சை நேரம் இருந்தது தொலைபேசி தொடர்பு கொண்டு மேலும் அவர்களுக்கு ஆதரவு அளித்த பல ஆராய்ச்சிகளும் சேர்க்கப்பட்டன. 33 ஆய்வுகள், வழக்கமான கண்காணிப்பு போன்ற மிகக்குறைந்த ஆதரவு, புகைப்பதை நிறுத்துவது பற்றிய சுருக்கமான ஆலோசனை அல்லது எழுத்துபூர்வமான சாதனங்கள் மட்டும் உள்ள தனிநபர் கலந்தாய்வோடு கட்டுப்படுத்தப்பட்ட குழுவுடனான கலந்தாய்வை ஒப்பிட்டன. இதில் 27 ஆய்வுகள் மக்களுக்கு புகைப்பதை நிறுத்த உதவும் நிகோடின் பதிலி சிகிச்சை அளிக்கவில்லை. 33 ல் 6 ஆய்வுகளில் நிகோடின் பதிலி சிகிச்சை அல்லது மற்ற மருந்து சிகிச்சை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைவருக்கும் அளிக்கப்பட்டது. 12 ஆய்வுகள் குறைந்த தீவிர ஆலோசனை வழங்கலுடன் அதிக தீவிர ஆலோசனை வழங்கலை ஒப்பிட்டது. மற்ற ஐந்து ஆய்வுகள் பலவித ஆலோசனை வழங்கல் முறைகளுடன் ஒப்பிட்டன.
முக்கிய முடிவுகள் மற்றும் ஆதாரத்தின் தரம்
குறைந்தபட்ச ஆதரவுடன் தனிப்பட்ட ஆலோசனை வழங்கலை ஒப்பிடுகையில் 40% முதல் 60 % வரை புகைப்பிடிப்பதை விடுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அனைத்து ஆய்வுகளின் ஒருங்கிணைத்த முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் அர்த்தம் யாதெனில் கட்டுப்பாட்டு குழுவிற்கு அளிக்கப்பட சுருக்கமான ஆதரவைப் பயன்படுத்தி குறைந்த பட்சம் ஆறு மாதகாலமாவது 100க்கு ஏழு பேர் வரை புகைப்பதை நிறுத்த முடிந்தது என்றால், 100க்கு 10 முதல் 12 பேர்வரை ஆலோசனை வழங்கலுக்குப் பின்னர் புகைப்பதை நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்பதாகும். ஆதாரங்களின் தரத்தை உயர்வானவை என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். தவிர ஒவ்வொரு வரும் NRT அல்லது இதர மருந்துகளை உட்கொண்டிருந்து, கட்டுப்பாட்டு குழுவில் 100 –க்கு 11 பேர் புகைப்பதை நிறுத்த முடிந்தது எனில், கூடுதலாக ஆலோசனை வழங்கல் எடுத்துக்கொண்டோரில் 100க்கு 11 முதல் 16 பேர் வரை புகைப் பிடிப்பதை நிறுத்துவதில் வெற்றியடைவர் என்று எதிர்பார்க்கலாம். சிகிச்சையின் பயன் அளவு நிச்சயமற்ற தன்மையுடையதாக இருந்ததால்இந்த ஆதாரம் மிதமான தரம் கொண்டதென நாங்கள் மதிப்பிட்டோம். தீவிர ஆலோசனை ஊக்கம் வழங்கல், உதாரணமாக அதிகப்படியான சிகிச்சை அமர்வுகள், அதிகமாக உதவலாம்; ஆனால் அந்த பயன் சிறியதாகவே இருக்கக்கூடும் . மேலும் சிகிச்சையின் பயன் அளவு நிச்சயமற்ற தன்மையுடையதாக இருந்ததால் ஆதாரங்கள் மிதமான தரம் கொண்டவையாக இருந்தன. பலவித ஆலோசனை வழங்கல் முறைகளை ஒப்பிட்ட சில ஆய்வுகள் அதனிடையே எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்று காண்பித்தது.
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு