பக்கவாதத்திற்கு பிறகு வரும் தோள்பட்டை வலியைத் தடுக்க மற்றும் சிகிச்சைக்கு மின் தூண்டுதல்

தசைகளில் மின் தூண்டுதலினால் பக்கவாதத்திற்குப் பிறகு தோள்பட்டை விறைப்பு சீரடைகிறது ஆனால் அது தோள்பட்டை வலியைக் குறைக்கும் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. பக்கவாத நோயாளிகள்(இது திடீரென மூளையின் ரத்தநாளங்களில் ஏற்படும், அடைப்பினாலோ அல்லது மூளையின் ரத்த நாளங்களிலோ அல்லது மூளைக்கு செல்லும் ரத்தநாளங்களிலோ உண்டாகும் வெடிப்பு மற்றும் ரத்தக்கசிவினால் ஏற்படுவதாகும்) பொதுவாக தோள்பட்டை வலியால் பாதிக்கப்படுவார்கள். இது பக்கவாதத்தின் சிரமங்களோடு கூடுதலாக சேர்ந்து கொள்கிறது. தோள்பட்டை வலி பலவீனம், தசை முறுக்கு மற்றும் உணர்வு இழப்பினை ஏற்படுத்தும். தோல் வழியாக மின்சாரம் கொடுத்து மின் நரம்பு தூண்டுதல் (ES) செய்யப்படுகிறது. இது நரம்புகள் மற்றும் தசை நார்களை தூண்டுகிறது அதன் மூலம் தசை முறுக்கு, தசை வலு மற்றும் வலியை சீராக்கலாம். தசை மின்தூண்டலால் தோள்பட்டை விறைப்பு மேம்படுத்தப்படும் என்று இந்த திறனாய்வு கண்டறிந்தது. எந்தவித பாதகமான விளைவுகளும் தெரிவிக்கப்படவில்லை. மின்தூண்டல் தோள்பட்டை வலியைக் குறைக்கும் அல்லது குறைக்காது என்பதை முடிவு செய்ய போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று இந்த திறனாய்வு கண்டறிந்தது. மேலும் அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: க. அழகுமூர்த்தி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information