குறைப்பிரசவத்தின் சிகிச்சைக்கான சைக்ளோஆக்சிஜெனேஷ் (COX) தடுப்பான்கள்

குறைப்பிரசவ அச்சுறுத்தல் உள்ள பெண்களுக்கு COX தடுப்பான்கள் கொடுப்பதால் முன்கூட்டியே குழந்தைகள் பிறப்பதற்கான ஆபத்தைக் குறைக்கும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை.

முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள் தீவிர நோய்களுக்கான அதிக ஆபத்தில் உள்ளனர், மேலும் அநேகமாக அக்குழந்தைகள் உயிர்வாழ்வதில்லை. COX தடுப்பான்கள் கர்ப்ப பையின் சுருங்கல்களை தடுப்பதன்மூலம், குழந்தை பிறப்பதை ஒத்திவைத்து, குழந்தையின் நுரையீரல்கள் முதிர்வடைவதற்காக தாய்மார்களுக்கு ஸ்டீராய்டுகள் கொடுப்பதை அனுமதிக்கலாம். COX தடுப்பான்கள் குழந்தையின் இருதயம், நுரையீரல், மற்றும் சிறுநீரகத்தின் மீது மட்டுமின்றி தாக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். குறைப்பிரசவத்திற்கு கொடுக்கப்படும் ஏனைய மருந்துகளும் பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. COX தடுப்பான்கள் முன்கூட்டியே பிறக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில், சிகிச்சையே இல்லாமை, மற்றும் ஏனைய மருந்துகளைவிடவும் மிக சிறந்ததாக இருக்கலாம் என்பதை இந்த ஆய்வு கண்டுள்ளது. ஆயினும், பாதகமான விளைவுகள் பற்றிஅறிய போதிய ஆதாரம் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஜெயலக்ஷ்மி மற்றும் சி. இ.பி.என்.அர் குழு

Tools
Information