இந்த திறனாய்வின் நோக்கம் என்ன?
உயர்-இரத்த அழுத்ததோடு தொடர்புடைய, இறப்பு எண்ணிக்கை, பக்கவாதங்கள் , மற்றும் மாரடைப்பு போன்றவற்றைத் தடுப்பதில் பீட்டா பிளாக்கர்ஸ்ன் திறன் பற்றி மதிப்பீடு செய்வதே இந்த காக்ரேன் திறனாய்வின் நோக்கம். இந்த கேள்விக்கான விடையை கண்டறிய இதன் தொடர்புடைய ஆராய்ச்சிகளை நாங்கள் சேகரித்து பின்பு' அதனை பகுப்பாய்வு செய்தோம். இதில் எங்களுக்கு இது தொடர்புடைய 13 ஆராய்ச்சிகள் கிட்டின.
உயர் இரத்த அழுத்தம் உள்ள பெரியவர்களுக்கு பீட்டா பிளாக்கர்ஸ் மற்ற மருந்துகளை போல நன்றாக வேலை செய்யுமா?
இறப்பு எண்ணிக்கை, பக்கவாதங்கள் , மற்றும் மாரடைப்பு ஆகியவற்றைத் தடுப்பதில் பீட்டா பிளாக்கர்ஸ் மற்ற மருந்துகளான கால்சியம் பிளாக்கர்கள், நீரிறக்க ஊக்கிகள் (diuretics) மற்றும் ரெனின்-ஆஞ்சியோடென்சின் அமைப்பு தடுப்பான்கள் (renin-angiotensin system inhibitors) போன்று திறனானது அல்ல. இந்த முடிவுகளில் பல, பொதுவாக அடேநோலோல் என்ற ஒரு வகை பீட்டா பிளாக்கர்ஸ் இல் இருந்து பெறப்பட்டவை. ஆனால், பீட்டா பிளாக்கர்ஸ் பல்வேறு குணங்கள் கொண்ட பல வகைகளாக இருப்பதால் இதனை பற்றி நன்கு வடிவமைக்கப்பட்டு செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இந்த பகுதியில்தேவை.
இந்த ஆய்வு எதை திறனாய்வு செய்தது?
உயர் இரத்த அழுத்தம் உள்ள இலட்சக் கணக்கானோர் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் பல நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். பலர் இதனால் இறக்கவும் நேரிடுகிறது . தகுந்த சிகிச்சை கொண்டு இதனை தடுக்க முடியும். ஆராய்ச்சியாளர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு பலவித மருந்துகள் கொண்டு சிகிச்சை அளிக்க முயற்சித்துள்ளார்கள்.
இந்த திறனாய்வின் முக்கிய முடிவுகள் என்ன?
உயர் வருவாய் நாடுகளில் , குறிப்பாக மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் செய்யப்பட்ட 13 ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். இந்த ஆராய்ச்சிகளில் பீட்டா பிளாக்கர்ஸ் மருந்துஎடுத்துகொண்டவர்களை , எந்த ஒரு சிகிச்சையோ அல்லது வேறு மருந்தோ எடுக்காதவர்களுடன் ஒப்பிடப்பட்டது. ஆய்வுகள் பின்வருவதைக் காட்டுகின்றன:
உயர் இரத்த அழுத்தத்திற்குசிகிச்சை பெறுபவர்களிடையே , பீட்டா பிளாக்கர்ஸ், இறப்பு விகிதத்தில் சிறிய அல்லது எந்த வித்தியாசமும் உண்டாக்காது. நீரிறக்க ஊக்கிகள் (diuretics) மற்றும் ரெனின்-ஆஞ்சியோடென்சின் அமைப்பு தடுப்பான்கள் (renin-angiotensin system inhibitors) போலவே இதன் திறனும் தோன்றுகிறது ஆனால் இறப்பை தடுப்பதில் கால்சியம் பிளாக்கர்களுடன் ஒப்பிடும்போது அனேகமாக இவை அவ்வளவு திறனானது அல்ல.
பக்கவாதம் ஏற்படும் எண்ணிக்கையை பீட்டா பிளாக்கர்கள் குறைக்கலாம், மற்றும் இதன் திறன் நீரிறக்க ஊக்கிகள் போலவே இருக்கிறது. பக்கவாதம் வராமல் தடுப்பதில் பீட்டா பிளாக்கர்ஸ் ரெனின்-ஆஞ்சியோடென்சின் அமைப்பு தடுப்பான்கள் (renin-angiotensin system inhibitors) சமமாக வேலைசெய்யும்.
பீட்டா பிளாக்கர்கள் சிகிச்சை, உயர் இரத்த அழுத்தமுடையோரிடையே மாரடைப்பு எண்ணிக்கையில் சிறிய அல்லது எந்த வித்தியாசமும் ஏற்படுத்தாது. இதன் திறன் , ரெனின்-ஆஞ்சியோடென்சின் அமைப்பு தடுப்பான்கள் (renin-angiotensin system inhibitors), நீரிறக்க ஊக்கிகள் (diuretics) அல்லது கால்சியம்-சேனல் பிளாக்கர்களின் திறன் போலவே இருக்கும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு பீட்டா பிளாக்கர்கள் மாரடைப்பை குறைப்பதில் நீரிறக்க ஊக்கிகள் (diuretics) போல திறன்பட செயல்படாது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
எடுத்துக் கொண்டவர்களை விட, பீட்டா பிளாக்கர்ஸ் உட்கொண்டவர்கள் பக்க விளைவுகளால் சிகிச்சையை நிறுத்த அதிக வாய்ப்புஉள்ளது. ஆனால் பீட்டா பிளாக்கர்ஸ், கால்சியம்-சேனல் பிளாக்கர்கள். மற்றும் நீரிறக்க ஊக்கிகள் (diuretics) இடையே பக்க விளைவுகள் ஏற்படுத்துவதில் எந்த வேறுபாடும் இல்லை.
இந்த திறனாய்வு எவ்வளவு புதியது (update)?
திறனாய்வாளர்கள் ஜூன் 2016 வரை வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகளை தேடினர் .
மொழிபெயர்ப்பு: சி. இ.பி. ஏன். அர்.