சிஸ்டிக் பைப்ரோசிஸ் கொண்ட மக்களின் நுரையீரல்களில் மிகுதியான சளி உருவாகுகிறது. இது, திரும்ப திரும்ப ஏற்படும் தொற்றுக்கும் மற்றும் திசு சிதைவிற்கும் வழி நடத்தும். மருந்துகள் மற்றும் பலவிதமான நெஞ்சக பிசியோதெரபி நுட்பங்களை பயன்படுத்தி இந்த சளியை நீக்குதல் முக்கியமானதாகும். நுரையீரல் செயல்பாடு மற்றும் நோயாளி விருப்பம் மீது வெவ்வேறு முறைகளின் விளைவுகளை ஒப்பிட நாங்கள் நோக்கம் கொண்டோம். ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த ஆய்வுகளுக்காக நாங்கள் தேடினோம். நாங்கள், பதினைந்து ஆய்வுகளை இந்த திறனாய்வில் சேர்த்தோம். நுரையீரல் செயல்பாட்டை பொறுத்தமட்டில், நெஞ்சக பிசியோதெரபி மற்றும் பிற சிகிச்சை முறைகள் இடையே எந்த வித்தியாசத்தையும் இந்த ஆய்வுகள் காட்டவில்லை. குறுகிய-கால தொற்றுகளின் மேலான ஆய்வுகள், சிகிச்சை வகையின் பொருட்படுத்துதல் அல்லாமல், நுரையீரல் செயல்பாட்டில் மேம்பாட்டை காட்டியது, நீண்ட-கால ஆய்வுகள் சிறிய அளவிலான மேம்பாடுகள் அல்லது இறக்கத்தை காட்டின. பத்து ஆய்வுகளில், பங்கேற்பாளர்கள் தங்களுக்கு தாங்களே செலுத்திக் கொண்ட நுட்பங்களுக்கு விருப்பப்பட்டனர். இந்த திறனாய்வு , நன்கு-வடிவமைக்கப்பட்ட நீண்ட-கால சோதனைகள் இல்லாத குறையினால் வரம்பிற்குட்பட்டிருந்தது. நுரையீரல் செயல்பாட்டிற்கு, பிற சிகிச்சைகளைக் காட்டிலும் பாரம்பரிய நெஞ்சக பிசியோதெரபி நுட்பங்கள் சிறப்பானதாக இருந்தன என்பதற்கு ஆதாரத்தை நாங்கள் காணவில்லை. இந்த நேரத்தில், மற்றொன்றை விட மேலான எந்த ஒற்றை சிகிச்சையையும் எங்களால் பரிந்துரைக்க முடியாது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.