அறுவைச்சிகிச்சையின் போதும் முடிந்த பின்னும் பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது நோயாளியின் முன்னேற்றத்தை மேம்படுத்துமா?

ஆக்சிஜன் இரத்தத்திலிருக்கும் ஹீமோகுளோபினுடன் இணைக்கப்பட்டு உடல் முழுவதும் எடுத்துச்செல்லப்படுகிறது. தோலில் ஒளியை செலுத்துவதன்மூலம்,இரத்தம் எவ்வளவு ஆக்சிஜெனை எடுத்து செல்கிறது என்பதை பல்ஸ் ஆக்சிமீட்டர் கண்காணிக்கின்றது. இரத்தத்தின் ஆக்சிஜன் அளவு உத்தம மட்டத்திற்கு கீழ் இறங்கும் நிலையே— இரத்த உயிர் வளிக்குறை (உயிர்வளிப்பற்றாக்குறை) (ஹைப்பாக்சியா) எனப்படும். மருத்துவ ஊழியர்கள் அறுவை சிகிச்சையின் போதும் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகும் நோயாளிகளை அடிக்கடி பல்ஸ் ஆக்சிமீட்டர்மூலம் கண்காணிக்கின்றனர், ஆனால் இந்த நடைமுறை அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் தீங்கு விளைவிக்கும் ஆபத்தை குறைக்குமா என்பது தெளிவாக இல்லை. பல்ஸ் ஆக்சிமீட்டரின் பயன்பாட்டால் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு விளைவுபயன் இருக்கிறதா என்பதற் கான ஆதாரங்களை இந்த திறனாய்வில் ஆய்ந்தோம். இந்த இற்றைப் படுத்தப்பட்ட (updated)திறனாய்வு தேடல் தற்போதைய ஜூன் 2013வரையிலானது ஆகும். இதில் இந்த திறனாய்விற்கு மொத்தம் 22,992 பங்கேற்பாளர்கள் கொண்ட ஐந்து ஆராய்ச்சிகள் கண்டறியப்பட்டது . அனைத்து பங்கேற்பாளர்களும் (at random )சமவாய்ப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்ஸ் ஆக்சிமீட்டர்மூலம் கண்காணிக்கப்பட்டும், கண்காணிக்கப்படாமலும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் முடிவுகள் புள்ளியலால் இணைக்கதகுந்த அளவிற்கு ஒன்றுக்கொன்று ஒத்திருக்கவில்லை. பல்ஸ் ஆக்சிமீட்டரால் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைபாட்டை கண்டறிய முடியும் என்றாலும், அதன் பயன்பாடு ஒரு நபரின் புலனுணர்வு செயல்பாட்டை பாதிக்காது மற்றும் சிக்கல்கள் அல்லது மயக்க மருந்துக்கு பின்னர் இறக்கும் அபாயத்தையும் குறைக்க முடியாது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இரண்டு குழுக்களிலும் விளைவுகளை ஒரே விதமாக மதிப்பீடு செய்வதில் கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டதாலும் மற்றும் இந்த ஆராய்ச்சிகள் போதுமான அளவு பெரிதாக இருந்ததால், சிக்கல்கள் குறைக்கப்படுகிறது என்பதை காட்ட இந்த ஆய்வுகள் போதுமானது. மயக்க மருந்து மற்றும் செவிலியர் பேணுகைத் தரம் அதிகம் உள்ள வளர்ந்த நாடுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. குறைந்த விரிவான சுகாதார ஒதுக்கீடுள்ள மற்ற புவியியல் பகுதிகளில் பல்ஸ் ஆக்சிமீட்டர் பயன்பாடு விளைவுகளில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சாத்தியமே.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ந.தீபாமோகன்பாபு மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.

Tools
Information