நமது உணவில் கொழுப்பை மாற்றுவது, (சில தெவிட்டிய (விலங்கு) கொழுப்புகளை தாவர எண்ணைகள் மற்றும் தெவிட்டாத பரவல்கள் கொண்டு மாற்றுவது) இதய மற்றும் இரத்த குழாய் நோயின் அபாயத்தை குறைக்கக் கூடும், ஆனால் ஒற்றை-தெவிட்டிய அல்லது பல்-தெவிட்டிய கொழுப்புகள் மிக சிறந்த பயனளிக்குமா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. தெவிட்டிய கொழுப்புகளுக்கு பதிலாக மாவுச்சத்து உணவுகளை மாற்றி பொருத்துதலுக்கு (நாம் உண்ணும் மொத்த கொழுப்பின் அளவை குறைத்தல்) தெளிவான ஆரோக்கிய நன்மைகள் எதுவும் இல்லை. மாரடைப்புகள், நெஞ்சு வலி, பக்கவாதம், திடீர் இதயத்தமனி மரணம் மற்றும் இதய அறுவை சிகிச்சைக்கான தேவை ஆகியவை இதய மற்றும் இரத்த குழாய் நோய்களில் உள்ளடங்கும். குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு நாம் உண்ணும் கொழுப்பை மாற்றுவதை கடைப்பிடித்தால், அது நம்மை சிறப்பாக பாதுகாக்கக் கூடும். இதயத்தமனி நோய்க்கான அதிகப்படியான அபாயத்தை கொண்டிருக்கும் மக்கள் (எடுத்துக்காட்டிற்கு, உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த சீரம் கொழுப்புகள், அல்லது நீரிழிவு கொண்ட மக்கள்) மற்றும் ஏற்கனவே இதய நோய் உள்ள மக்களை போன்றே தற்போது ஆரோக்கியமாக உள்ள மக்கள் நன்மை பெறுவார்களா என்பது தெளிவாக இல்லை, ஆனால், அவர்கள் யாவரும் ஓர் அளவிற்கு நன்மை பெறுவர் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.