பார்க்கின்சன் நோய்க்கு பல்வேறு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகள் இருக்கின்ற போதிலும், நோயாளிகள் படிப்படியாக குறிப்பிடத்தக்க உடல் பிரச்சனைகளால் பாதிப்படைகின்றனர். இயன்முறை மருத்துவர்கள், தகுந்த சிகிச்சை பரிகாரங்கள் மூலம் பார்கின்சன் நோய் கொண்டவர்கள் தங்களின் அதிகபட்ச இயக்கம், செயல்பாடு, மற்றும் சாராதிருத்தல் ஆகியவற்றை பராமரிக்க உதவிபுரிவதை நோக்கமாக கொண்டுள்ளனர். உடல் திறனை அதிகபட்சம் பெருக்குவதன் மூலமும் நோய் பீடிப்பு முழுமைக்கும் உள்ள இரண்டாம்நிலை சிக்கலான கோளாறுகளைக் குறைந்தபட்சமாக ஆக்குவதன் மூலமும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட பலதரப்பட்ட இயக்க புனர்வாழ்வு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இயன்முறை மருத்துவம் குறுகிய காலக்கட்டத்தில் பயன் உள்ளது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் எந்த இயன்முறை மருத்துவ முறை மிக சிறந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் மட்டுமே இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வுகளில், ஒரு வகையான இயன்முறை சிகிச்சை பெற்றவர்கள் வேறு ஒரு வகையான இயன்முறை சிகிச்சை பெற்ற மற்றொரு குழு பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடப்பட்டனர். பாரபட்சம் ஏற்படுவதை குறைக்கும் வண்ணம் சமவாய்ப்புப் பதக்கூறெடுத்தல் மூலம் சோதனை குழுக்களுக்குப் பங்கேற்பாளர்கள் ஒதுக்கப்பட்டனர்.
1673 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 43 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை (ஆய்வுகளின் சராசரி அளவு 39 பங்கேற்பாளர்கள்) இந்த திறனாய்விற்குப் பொருத்தமானதாக அடையாளம் காணப்பட்டது . இந்த ஆய்வுகள் பல்வேறு வகையான இயன்முறை சிகிச்சை தலையீடுகளை மதிப்பீடு செய்தது. ஆதலால் பயன்படுத்தப்பட்ட சிகிச்சை தலையீடுகளின் (இயன்முறை மருத்துவம், உடற்பயிற்சி, ஓடுபொறி பயிற்சிகள், நினைவுபடுத்தும் சொல் (cueing, நடனம் அல்லது தற்காப்பு கலை) அடிப்படையில் சோதனைகள் தொகுக்கப்பட்டன. இருந்தபோதிலும் , இத்தகைய தொகுப்பிற்குப் பின்னரும் பயன்படுத்தப்பட்ட இயன்முறை சிகிச்சை தலையீடுகளின் வெளிப்பாடுகள் மற்றும் மதிப்பீடு செய்யப்பட்ட அவற்றின் விளைவுகளில் தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை இணைக்கமுடியாத அளவு பெரும் வேறுபாடுகள் இருந்தன.
பர்கின்சன் நோய் சிகிச்சைக்குச் சோதிக்கப் பட்ட விரிவான பலவித இயன்முறை சிகிச்சை உத்திகளை இந்த திறனாய்வு முன்னிலைப்படுத்தியது. சிறிய எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள்,விரிவான பல்வேறு இயன்முறை தலையீடுகள் மற்றும் அவற்றின் மதிப்பீடு செய்யப்பட்ட விளைவுபயன்கள் ஆகியவற்றை எண்ணிப்பார்க்கும் போது, பர்கின்சன் நோய் சிகிச்சைக்கு எந்த ஒரு இயன்முறை சிகிச்சை முறையும் மற்றொரு முறைய விட மேலானது என ஆதரிக்க போதுமான ஆதாரம் இல்லை.
மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு