பின்புலம்
ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள் வேலை-தொடர்பான அல்லது தொழில்சார் மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றனர். ஏனெனில் இது பெரும்பாலும் ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்புகளை சந்திப்பதாலும் மற்றும் அவர்களுக்கு போதுமான நேரம், திறன்கள் மற்றும் வேலையில் சமூக ஆதரவு இல்லாததாலும் உண்டாகிறது. இது கடுமையான துன்பம், மனச்சோர்வு அல்லது உடல் நோயை ஏற்படுத்தலாம். இறுதியில், ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள் உயர் தரமான ஆரோக்கிய பராமரிப்பு சேவைகளை வழங்க முடியாமல் போகலாம். மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு அதிக செலவு வைப்பதாக இருக்க முடியும், ஏனெனில் பாதிக்கப்பட்ட ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள் சுகவீன விடுப்பு எடுத்து மற்றும் வேலைகளைக் கூட மாற்றலாம்.
நாங்கள், எவ்வளவு நன்றாக வெவ்வேறு வழிகளில் ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்களின் மன அழுத்தம் அல்லது பணி மனச்சோர்வை தடுக்கலாம் என்று மதிப்பிட்டோம்.
ஆய்வுப் பண்புகள்
நாங்கள், முற்றிலும் 7188 பங்கேற்பாளர்கள் சேர்க்கப்பட்டுள்ள 58 ஆய்வுகளைச் சேர்த்தோம். சேர்க்கப்பட்ட ஆய்வுகளில், 54 சீரற்ற சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளாகவும் மற்றும் நான்கு சீரான சமவாய்ப்பற்ற ஆய்வுகளாகவும் இருந்தன. நாங்கள், தலையீடுகளை புலனுணர்வு சார்ந்த நடத்தை பயிற்சி, மன மற்றும் உடல் தளர்வு , அல்லது நிறுவன மாற்றங்கள் என்று வகைப்படுத்தினோம்.
பிரதான முடிவுகள் மற்றும் சான்றின் தரம்
புலனுணர்வு சார்ந்த நடத்தை பயிற்சி தலையீடுகள்
ஆறு ஆய்வுகளின் படி, ஒரு மாதத்திற்கு குறைவானது முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான பின்தொடர்ந்தல் காலகட்டங்களில் அளவிடும் போது தலையீடுயில்லாமையுடன் ஒப்பிடும்போது புலனுணர்வு-சார்ந்த நடத்தை பயிற்சி தலையீடுகள் 13% மன அழுத்தத்தைக் குறைத்தது என்பதற்கு குறைந்த தர சான்று இருந்தது. இந்த குறைவு மன அழுத்தம் உள்ள ஒரு நபருக்கு எவ்வளவு பொருத்தமானது என்பது தெளிவாக தெரியவில்லை. புலனுணர்வு-சார்ந்த நடத்தை பயிற்சியை தளர்வுடன் இணைத்த போதும் முடிவுகள் ஒன்று போலவே இருந்தன. எனினும், மூன்று ஆய்வுகளில், மன அழுத்த நிலைகளில் மன அழுத்த மேலாண்மையில் கவனம் இல்லாத ஆனால் பாதுகாப்பு உள்ளடக்கத்ததில் கவனம் கொண்ட ஏனைய பயிற்சிகளுடன் ஒப்பிடுகையில், ஒரு புலனுணர்வு-சார்ந்த நடத்தை பயிற்சிக்குப் பின்னரும் மன அழுத்த நிலைகள் ஒன்று போலவே இருந்தன.
மன மற்றும் உடல் தளர்வு தலையீடுகள்
17 ஆய்வுகளில் தலையீடுயில்லாமையுடன் ஒப்பிடும்போது மன மற்றும் உடல் தளர்வு தலையீடுகள் மன அழுத்த நிலைகளில் 23% குறைவுக்கு வழிவகுத்தது என்பதற்கு குறைந்த முதல் மிதமான வரையிலான தர சான்று இருந்தது.
நிறுவன தலையீடுகள்
20 ஆய்வுகளில் நிறுவன தலையீடுகள் வேலை நிலைமைகளை மாற்றுதல், ஆறு ஆய்வுகளில் ஆதரவு மேம்படுத்துதல் அல்லது வழிகாட்டுதல், நான்கு ஆய்வுகளில் பாதுகாப்பு உள்ளடக்கத்தை மாற்றுதல், ஒரு ஆய்வில் தகவல் தொடர்பு திறன் மேம்படுத்துதல் மற்றும் இரண்டு ஆய்வுகளில் வேலைத் திட்டங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டிருந்தன. இரு ஆய்வுகளில் குறுகிய அல்லது தடங்கலுடன் கூடிய வேலை அட்டவணைகள் மன அழுத்தத்தைக் குறைத்தது, ஆனால் அங்கு எந்த ஒரு பிற நிறுவன தலையீடுகளுக்கும் தெளிவான பயன் இருக்கவில்லை.
முடிவுகள்
நாங்கள் புலனுணர்வு சார்ந்த நடத்தை பயிற்சி அத்துடன் மன மற்றும் உடல் தளர்வு அனைத்தும் மிதமான அளவில் அழுத்தத்தை குறைக்கும் என்று தீர்மானிக்கிறோம். வேலையின் கால அட்டவணைகளை மாற்றுவது கூட மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் , ஆனால் பிற நிறுவன தலையீடுகளுக்கு எந்த தெளிவான விளைவுகளும் இல்லை. நமக்கு குறைந்தது 120 பங்கேற்பாளர்கள் கொண்ட, மற்றும் முன்னுரிமையாக ஒரு கூறு தலையீட்டுடன், சமவாய்ப்புடன் ஆய்வுகள் வேண்டும். மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும் என்று குறிப்பிட்ட காரணிகளை முகவுரைப்பதில் நிறுவன தலையீடுகள் நன்றாக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.