பெல்ஸ் பால்ஸி அல்லது பெல்ஸ் பால்ஸி அல்லது (முதல்நிலை) காரணமில்லாத முகவாதம் என்பது முக தசைகளின் இயக்கங்களை கட்டுபடுத்தும் ஏழாவது நரம்பை பொதுவாக பாதிக்கும் கோளாறு. இது முகத்தில் உள்ள ஒரு பக்க தசைகளை வலுவிழக்க அல்லது செயலிழக்க செய்யும். தசைகள் வலுவிழப்பதால் முகம் உருகுலைந்து போவதுடன் வழக்கமான செயல்பாடுகளாகியகண் இமைகள் திறந்து மூடுதல்மற்றும் உண்ணுதலில் சிரமம் ஏற்படும். முக நரம்பில் அழற்சி ஏற்படுவதால் முகவாதம் ஏற்படுவதாக எண்ணபடுகிறது.
மரபுவழி சீனமருத்துவத்தில், முகவாதம் என்பது “வாய் கோணுதல்” என்று அறியப்படுகிறது. பண்டைய அரசவம்சத்தினர், உடலில் ஏற்படும் வாயு கோளாருகளால் இந்த முகவாதம் ஏற்படுகிறது என நம்பினர். மனித உடலில்அடங்கியுள்ள, சீ”(Qi) என்பது மனித உடலில் முக்கிய பகுதிகள் மற்றும் உள்உறுப்புகளின் இயக்கங்கள், ஆசனப்பை, ரத்த ஓட்டதடங்கள், கிளைதடங்கள் மற்றும் கழிவுகள் இயக்கம் ஆகியவற்றை கட்டுபடுத்துகின்ற, உடலின் இன்றியமையா பொருட்கூறுகள் அடங்கியதாகும். அது,வாழ்க்கை நடவடிக்கைகளை பராமரிகிறது, மேலும் உடலின் எதிர்ப்பு சக்தியை பிரதிபலிக்கிறது. சீ"குறைபாடுவெளியிலிருந்து நோயுண்டாக்கும் காற்றோட்டங்கள் உடலில்புகுந்து தாக்குவதற்கு வழிவகுக்கிறது. சீனமரபுவழி மருத்துவத்தின் ஒன்றான குத்தூசி மருத்துவம் (அக்குபஞ்சர்), பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தோலின் மேற்பரப்பிலுள்ள, குறிப்பிட்ட புள்ளியிடங்களில், மெல்லியகுத்தூசிகளை செலுத்துதல் ,அல்லது குத்தூசி புள்ளியிடங்களில் வேறு பல நுட்பங்களை உபயோகித்து குணப்படுதுதல் போன்ற முறைகள் இதில் அடங்கும். பெல்ஸ் பால்ஸிக்கு குத்தூசி மருத்துவம் ஒரு வேலை, பல நன்மைகளை கொடுக்கலாம். இந்த பகுப்பாய்வின் நோக்கமானது, சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் மற்றும் கட்டுபடுத்தபட்ட ஆய்வுகளை, பகுப்பாய்வு செய்து, முகவாததிற்கு குத்தூசி ஏதேனும் விளைவுகளை பயக்குமா என்று கண்டறிவதாகும். மொத்தம் 537 பங்கேற்பாளர்கள் கொண்ட ஆறு ஆய்வுகள் சேர்ப்பு விதிகளுக்கு உட்பட்டு இருந்தது. 5 ஆய்வுகளில் குத்தூசி சிகிச்சை மட்டுமே பயன்படுத்தபட்டது, மற்றவைகளில் குத்தூசியுடன் மற்ற மருந்துகள், உபயோகபடுத்தப்பட்டு இருந்தது. இந்த பகுப்பாய்விற்கென்று குறிப்பிடப்பட்ட விளைப்பலன்களை எந்த ஆராய்ச்சியும் உபயோகிக்கவில்லை. குத்தூசி சிகிச்சையினால் ஏற்படும் பாதகமான பக்கவிளைவுகளை பற்றி எந்த சோதனையிலும் தகவல் தரப்படவில்லை. இந்த பகுப்பாய்வின் வடிவமைப்பு,(சமவாய்ப்பு ஒதுக்கிட்டு முறை, ஒதுக்கீட்டில் மறைத்தல், மற்றும் மறைத்தல்) போன்ற நிச்சியமற்ற முறைகள் உள்ளடங்கிய மற்றும் ஆய்வை வெளியிடுதலில் உள்ள குறைபாடுகளின் நிமித்தம் ஏற்பட்ட தரக் குறைவு; மற்றும் ஆய்வுகள் இடையே காணப்பட்ட மருத்துவ வேறுபாடுகள் ஆகியவைகளினால், குத்தூசி மருத்துவத்தின் உச்சவினை பற்றி நம்பகமான முடிவுகளை கூறயியலவில்லை. எதிர்காலங்களில் அதிக தரம்வாய்ந்த ஆய்வுகள் குத்தூசி சிகிச்சையின் விளைவுகளை கண்டறிய தேவைப்படுகிறது.
மொழிபெயர்ப்பு: தி. செந்தில்குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு