உலகளவில், இறப்பு மற்றும் இயலாமையின் முதல் பத்து காரணங்களில் காயமும் ஒன்றாகும். அநேக இளைய மக்களில், அது முன்கூட்டிய வாழ்க்கை இழப்பிற்கும், மற்றும் பிழைத்தவர்களில் தொடர்ந்து செல்லும் அதிகமான மருத்துவ பராமரிப்பு செலவுகளுக்கும் வழி வகுக்கிறது. காயத்தை முக்கியத்துவப்படுத்தும் ஆம்புலன்ஸ் பணியாளர் குழுவிற்கான அட்வான்ஸ்டு உயிர் ஆதரவு (ஏஎல்எஸ்) , இந்த சேவை கிடைக்கப்பெறும் மேலோங்கிய உயர்-வருமான நாடுகளில், காயத்தால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை குறைவதற்கு பங்களித்தது என்று நம்பப்படுகிறது. ஏஎல்எஸ் சேவைகள், குறைந்த-மற்றும் நடுத்தர-வருமான நாடுகளுக்கும் பொருந்துமாறு கொள்ளப்படுகின்றன. ஆம்புலன்ஸ் பணியாளர் குழுவிற்கான ஏஎல்எஸ் பயிற்றுவிப்பு, காயம்ப்பட்ட மக்களில் விளைவுகளை மேம்படுத்தியது என்று பரிந்துரைக்க எந்தவொரு ஆதாரத்தையும் இந்த சோதனைகளின் திறனாய்வு காணவில்லை.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.