முழங்கால் அல்லது இடுப்பில் கீல்வாதம் உள்ளவர்களுக்கு ஓப்பியாய்டுகளின் தாக்கம் குறித்து ஆராய்ச்சிகளின் வாயிலாக நாங்கள் அறிந்து கொண்டதை 8275பேர் பங்கு பெற்ற 22ஆய்வுகள்(தேடல் 2012 ஆகஸ்ட்15 க்கு புதுப்பிக்கப்பட்டது ) கொண்ட இந்த காக்குரேன் மறுஆய்வு சுருக்கம் வழங்குகிறது. முழங்கால் அல்லது இடுப்பு கீல்வாதம் உள்ள நபர்களுக்கு மருந்தற்ற குளிகை அல்லது சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்கள் ஆகியவர்களோடு ஒப்பிடுகையில் ஓப்பியாய்டுகளினால் வலி, செயல்பாடுஆகியவற்றில் ஏற்படும் விளைவு ,நோயாளிகளின் பாதுகாப்பு, மற்றும் வாய்வழி அல்லது தோல்வழி உட்செலுத்துதலால் ஓபியாயிடுகளுக்கு அடிமையாதல் ஆகியவற்றைக் கண்டறியும் மருத்துவ ஆய்வுகளைத் தெரிந்து கொள்ள அறிவியல் தரவுத்தளங்களை நாங்கள் தேடினோம்.
இந்த ஆய்வு கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காண்பிப்பதாவது:
- வலி அல்லது உடல் செயல்பாட்டில் சொற்ப விளைவுகளை ஓப்பியாய்டுகள் ஏற்படுத்துகின்றன.
- ஒருவேளை அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இருப்பினும் எங்களிடம் பக்கவிளைவுகள் பற்றிய , குறிப்பாக அரிதான ஆனால் தீவிர பக்கவிளைவுகள் பற்றிய துல்லியமான தகவல் எதுவும் இல்லை.
கீல்வாதம் என்றால் என்ன? மற்றும் ஓப்பியாய்டுகள் என்றால் என்ன?
கீல்வாதம் என்பது முழங்கால் அல்லது இடுப்பு போன்ற மூட்டுகளைத் தாக்கும் நோயாகும். குருத்தெலும்பை மூட்டு இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, அதன் பாதிப்பைச் சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், எலும்பு வழக்கத்திற்கு மாறாக வளர்ந்து இந்நிலையைச் சரி செய்வதற்குப் பதிலாக, மோசமடையச் செய்கிறது. உதாரணமாக, எலும்பானது உருவிழந்து, மூட்டுவலியையும், மற்றும் ஸ்திரமற்ற மூட்டையும் உண்டாக்கும். இது உங்கள் உடல் செயல்பாடு, அல்லது உங்கள் முழங்கால் மூட்டினை உபயோகிக்கும் செயல்பாட்டு திறனைப் பாதிக்கலாம்.
புற்றுநோய் வலி அல்லது கீல் வாதம் வலிக்கு சக்தி வாய்ந்த வலி நிவாரண பொருளாக ஓப்பியாய்டுகள் பொதுவாக புரிந்துணரப்பட்டுள்ளன. மார்போன் hydromorphone (டிலாவ்டிட்), ஆக்சிகொடோன் (Percocet, gtc: mediawiki), மார்பின், மற்றும் பல-ஓபியாயிடுகளுக்கான சில உதாரணங்களாகும். இதனை ஊசி வடிவிலோ, ஒரு மாத்திரை வடிவிலோ அல்லது வலி பகுதியில் வைக்கப்படும் ஒரு ஒட்டு (patch) வடிவிலோ எடுத்து கொள்ள முடியும்.
ஓப்பியாய்டுகள் பெறும் கீழ்வாதம் உள்ளவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கான சிறந்த கணிப்பு:
வலி
- ஓப்பியாய்டுகள் பெற்றவர்கள் 1 மாதம் கழித்து, அவர்களின் வலியை 0(வலி இல்லை)-10 (உச்சக்கட்ட வலி) என்ற ஒரு அளவுக்கோலில், 3 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்.
- போலி மருந்து பெற்றவர்கள் 1 மாதம் கழித்து, அவர்களின் வலியை 0 (வலி இல்லை)-10 (உச்சக்கட்ட வலி) என்ற ஒரு அளவுக்கோலில், 2 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்.
வேறு விதமாகக் கூறிடின்:
ஓப்பியாய்டுகள் பெற்ற 100 பேரில் 41 பேர் (41%) மாற்றத்தை உணர்ந்தனர்
-மருந்தற்ற குளிகை சிகிச்சை பெற்ற 100 பேரில் 31 பேர் சிகிச்சைக்கு பின் மாற்றத்தை உணர்ந்தனர் (31%).
மருந்தற்ற குளிகை சிகிச்சை பெற்றவர்களை விட, ஓப்பியாய்டுகள் பெற்றவர்களில் கூடுதலாக 10 பேர் மாற்றத்தை உணர்ந்தனர் (10% வேறுபாடு). (உயர்-தர சான்று)
உடல் செயல்பாடு
- ஓப்பியாய்டுகள் பெற்றவர்கள் 1 மாதம் கழித்து, அவர்களின் உடற்சார்ந்த செயல்பாட்டு திறனை 0 (இயலாமை இல்லை)-10 (உச்சக்கட்ட இயலாமை) என்ற ஒரு அளவுக்கோலில், 2 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்.
- போலி மருந்து பெற்றவர்கள் 1 மாதம் கழித்து, அவர்களின் உடற்சார்ந்த செயல்பாட்டு திறனை 0 (இயலாமை இல்லை)-10 (உச்சக்கட்ட இயலாமை) என்ற ஒரு அளவுக்கோலில், 1 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்.
இதனை வேறு விதமாக கூறலாம் :
- ஓப்பியாய்டுகள் பெற்ற 100 பேரில் 34 பேர் (34%) மாற்றத்தை உணர்ந்தனர்
-மருந்தற்ற குளிகை சிகிச்சை பெற்ற 100 பேரில் 26 பேர் சிகிச்சைக்கு பின் மாற்றத்தை உணர்ந்தனர் (26%).
மருந்தற்ற குளிகை சிகிச்சை பெற்றவர்களை விட, ஓப்பியாய்டுகள் பெற்றவர்களில் கூடுதலாக 8 பேர் மாற்றத்தை உணர்ந்தனர் (8% வேறுபாடு). (உயர்-தர சான்று)
பக்க விளைவுகள்
- ஓப்பியாய்டுகள் மருந்து பெற்ற 100 பேரில் 22 பேர் பக்க விளைவுகளை அனுபவித்தனர் (22%).
- மருந்தற்ற குளிகை பெற்ற 100 பேரில் 15 பேர் பக்க விளைவுகளை அனுபவித்தனர் (15%).
போலி மருந்து பெற்றவர்களை விட ஓப்பியாய்டுகள் சிகிச்சை பெற்றவர்களில் 7 பேர் அதிகமாக பக்க விளைவுகளை அனுபவித்தனர் (7 % வேறுபாடு). (மிதமான-தர சான்று)
பக்க விளைவுகள் காரணமாக விலகியவர்கள்
- ஓப்பியாய்டுகள் மருந்து பெற்ற 1000 பேரில் 64 பேர் பக்க விளைவுகளை அனுபவித்ததால் விலகினர் (6.4%).
- மருந்தற்ற குளிகை பெற்ற 1000 பேரில் 17 பேர் பக்க விளைவுகளை அனுபவித்ததால் விலகினர் (1.7%).
- போலி மருந்து எடுத்துகொண்டவர்களைவிட ஓப்பியாய்டுகள் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களில் பக்க விளைவுகளால் அதிகமாக 47 பேர் விலகினர்.(4.7% வேறுபாடு). (உயர்-தர சான்று)
மருத்துவமனையில் அனுமதி, நிலையான இயலாமை அல்லது மரணம் ஆகியவற்றுக்கு வழி வகுத்த பக்க விளைவுகள்
-ஓப்பியாய்டுகள் பயன்படுத்திய 1000 பேரில் 13 பேர் பக்க விளைவுகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இடைவிடாது இயலாமை அல்லது மரணத்தை அனுபவித்தனர் (1.3%).
--போலி மருந்து பயன்படுத்திய 1000 மக்களில் 4 பேர் பக்க விளைவுகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இடைவிடாது இயலாமை அல்லது மரணத்தை அனுபவித்தனர்.(0.4%)
.- போலி மருந்து பெற்றவர்களை விட ஓப்பியாய்டுபெற்றவர்களில் , 9 பேர் அதிகமாக பக்க விளைவுகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு , இடைவிடாது இயலாமை அல்லது மரணத்தை அனுபவித்தனர்.(0.9%வேறுபாடு). (குறைவான-தர சான்று)
விலகும் அறிகுறிகள்
- ஓப்பியாய்டுகள் மருந்து பெற்ற 1000 பேரில் 24 பேர் விலகுவதற்கான அறிகுறிகளை அனுபவித்தனர் (2.4%).<%).
- மருந்தற்ற குளிகை பெற்ற 1000 பேரில் 9 பேர் விலகுவதற்கான அறிகுறிகளை அனுபவித்தனர் (0.9%).
போலி மருந்து சிகிச்சை பெற்றவர்களை விட, ஓப்பியாய்டுகள் பெற்றவர்கள் 15 பேர் அதிகமாக விலகுவதற்கான அறிகுறிகளை அனுபவித்தனர் (1.5%. வேறுபாடு). (மிதமான -தர சான்று)
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். குழு