தீங்கற்ற எதிர்பாரா நிலை கிறுகிறுப்புக்கு (paroxysmal positional vertigo (BPPV)) திருத்தப்பட்ட எப்லே உத்தி

பின்புலம்

இட நிலைப்பாட்டால் ஏற்படும் தீங்கற்ற எதிர்பாரா நிலை கிறுகிறுப்பு (paroxysmal positional vertigo (BPPV)) தலையை வேகமாக நகர்த்துவதால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர் தானோ அல்லது தன்னை சார்ந்த சுற்றுப்புறமோ நகர்வது அல்லது சுழலுவது போல உணர்கிறார். இது பொதுவாக தலைக்காயம் அல்லது காதில் ஏற்படும் தொற்று ஆகிய காரணங்களினால் ஏற்படுகிறது. தலையின் நகர்வு நின்ற பிறகும் காதில் உள்ள அரைவட்டக் குழாய்களில் உள்ள சிதைக் கூளங்கள் தொடர்ந்து நகர்வது BPPV ஏற்பட காரணமாக இருக்கலாம். இந்த சிதைக் கூளங்களின் நகர்வு, மற்ற உணர்வுகளுடன் முரண்படுகின்ற இயக்கம் தொடர்ந்து நிகழ்வது போன்ற புலனுணர்வை ஏற்படுத்துகிறது. ‘எப்லே’ உத்தி என்பது மருத்துவரால் (அல்லது இயன்முறை மருத்துவர், கேட்டலியல் நிபுணர் போன்ற உடல்நல சிறப்புத் திறலினர்களால்) கொடுக்கப்டும் சிகிச்சையாகும். இந்த உத்தியானது உட்கார்ந்து நிலையிலிருந்து படுக்கவைத்தல், உருண்டு படுத்தல் அதற்குப் பின் உட்காரவைத்தல் ஆகிய தலை மற்றும் உடல் இணைந்த நான்கு தொடர் அசைவுகளை உள்ளடங்கியாது. இந்த உத்தியால் சிதைக் கூளங்கள்அரைவட்டக் குழாய்களிலிருந்து வெளியேற்றப்படுகிறது என்று அறியப்படுகிறது. இந்த ‘எப்லே’ உத்தி பற்றிய செயல்முறை விளக்கத்தை இணைப்பு வீடியோ அளிக்கிறது.

ஆய்வுகளின் பண்புகள்

மொத்தம் 745 பேர் பங்கற்பார்கள் கொண்ட 11 ஆய்வுகள் இந்த திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இவற்றில் 334 நோயாளிகளை உள்ளடக்கிய 5 ஆய்வுகள் ‘எப்லே’ உத்தியின் திறனை போலி உத்திக்கு எதிராக ஒப்பிடு செய்தது.3 ஆய்வுகள் மற்ற துகள்களை வேறிடத்திற்கு மாற்றும் உத்தி (செமொன்ட், ப்ராண்ட்- டரோப், கன்ஸ்), மற்ற மூன்று ஆய்வுகள் ஒப்பு கட்டுப்பாட்டு குழுவுடன் (எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை, மருந்து உட்கொள்ளல், உடற் கூறு நிலையை கட்டுப்படுத்தல்) எதிராக ஒப்பிடு செய்தது. 8 ஆய்வுகளில் பங்கு பெற்றவர்கள் மருத்துவமனையில் காது-மூக்கு-தொண்டை மருத்துவப் பிரிவுகள், மற்றும் இரு ஆய்வுகளில் பங்கேற்றவர்கள் குடும்ப மருத்துவராலும் சிகிச்சை அளிக்கப்பட்டனர். எல்லா நோயாளிகளும் 18 முதல் 90 வயது முதிர்ந்தோர் ஆவர். பங்கு பெற்றவர்களின் பாலின விகிதாச்சாரம் 1 ஆணுக்கு 1.5 பெண் என்ற எண்ணிக்கை ஆகும்.

முக்கிய முடிவுகள்

தலைச்சுற்றலை தீர்த்தலில் ‘எப்லே’ உத்தி போலி மற்றும் ஒப்பு கட்டுப்பாட்டு குழுக்களோடு ஒப்பிடுகையில் சிறந்த பயனளித்துள்ளது. மேலும் ‘எப்லே’ தொழில் நுட்பத்தினை மற்ற துகள்களை வேறிடத்திற்கு மாற்றும் உத்தியுடன் ஒப்பீடடு செய்த எந்த ஆய்வும் தலைச்சுற்றல் தீர்த்தலை ஒரு விளைவுப் பயனாக கருதவில்லை.

டிக்ஸ்-ஹால்பைக் ( BPPV)வை கண்டறியக்கூடிய ஒரு சோதனை)) ஆய்வில் எதிர்மறையிலிருந்து நேர்மறையான மாற்றத்தை நோக்கும் போது, போலி மற்றும் ஒப்பு கட்டுப்பாட்டு குழுக்களோடு ஒப்பிடுகையில் முடிவுகள் எப்லே உத்தியை குறிப்பிடத்தக்க அளவில் ஆதரிக்கன்றன. எப்லே’ உத்தி செமொன்ட் மற்றும் கன்ஸ் உத்தியுடன் ஒப்பிடும் போது எந்தவொரு வேறுபாடும் காணப்படவில்லை. ஒரு ஒற்றை எப்லே சிகிச்சை முறை ஒரு வாரம் வரை தினமும் மும்முறை அளிக்கப்பட்ட ப்ராண்ட்- டரோப் பயிற்சிகளை காட்டிலும் ஆற்றல் வாய்ந்தது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

பக்க விளைவுகள் பற்றி பெரும்பாலும் தகவல்கள் அளிக்கப்படவில்லை. சிகிச்சையின் போது எந்த கேடான விளைவுகளும் ஏற்ப்படவில்லை. இடமாற்ற செய்கைப்பாட்டின் போது ஏற்படும் குமட்டலின் நிகழ்வுக்கான vaipp 16.7 – 32 விழுக்காடு ஆகும். கழுத்து பிரச்சினைகளால் சில நோயாளிகளால் இந்த செய்முறையை தாக்குப்பிடிக்க இயலவில்லை.

குறுகிய கால அடிப்படையில் எப்லே உத்தி பாதுகாப்பான மற்றும் பயனுள்ள உத்தி என இந்த திறனாய்வு தெரிவிக்கிறது. மற்ற தொடர் உடல் அசைவு செயமுறைகளான செமொன்ட் மற்றும் கன்ஸ் உத்திகளும் இதை ஒத்த விளைவுகளை தருகிறது.

சான்றுகளின் தரம்

சீராய்வுக்கு உட்படுத்தப்பட்ட சான்றுகளில் ஒரு தலைச்சார்பு குறைந்த அளவிலேயே காணப்படுகிறது அனைத்து ஆய்வுகளும் சம வாய்ப்பு பகிர்வுடையது. இவற்றில் ஐந்து ஆராய்வுகள் முத்திரையிடப்பட்ட உரை அல்லது வெளிப்புற பகிர்வு முறையிலும் சமவாய்ப்பு செய்யப்பட்டது. ஏழு ஆய்வுகளில் நோயாliகளின் சிகிச்சைகுழு விபரம் மதிப்பீடாளர்களிடம் இருந்து மறைக்கப்பட்டுயிருந்தது. பெரும்பாலான ஆய்வுகளிலும் பங்கேற்றவர்களின் விளைவு விபரங்கள் பற்றிய அறிக்கை காணப்படுகிறது. இந்த சான்றுகள் ஜனவரி 2014 வரை நிலவரப்படியானவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: கோ. ஷங்கர் கணேஷ் வீ. ஷுண்முக சுந்தரம் மற்றும் சி.இ.பி. என். அர். குழு

Tools
Information