காசநோய் (டிபி), உடலின் வெவ்வேறு பகுதிகளை பாதிக்கக் கூடிய ஒரு கடுமையான பாக்டீரியா தொற்றாகும்; இது மிக அதிகமாக நுரையீரல்களை தாக்கக் கூடும் (நுரையீரல் டிபி). சில பாக்டீரியா, மருந்தை எதிர்க்கும் மற்றும் சில மக்கள் இந்த டிபி தொற்றோடு இன்னொரு மருத்துவ நிலையை கொண்டிருப்பர். கடுமையான இருமல், பலவீனம் மற்றும் வியர்வைகள் ஆகியவற்றால் மக்கள் அவதிப்படுவர் மற்றும், பல வருடங்களாக அதிக திறன் வாய்ந்த மருந்து சிகிச்சை இருக்கும் பட்சத்திலும், சில மக்கள் இன்னும் டிபியால் உயிர் இழக்கின்றனர். மருந்துகள் மேலும் திறன் மிக்கவையாக இருப்பதற்கு குறைந்த ஆற்றல் லேசர் சிகிச்சை உதவக் கூடும் என்று முன்மொழியப்படுகிறது. லேசர் சிகிச்சை அளிப்பதற்கு வித விதமான கருவிகள் உள்ளன, வெவ்வேறு அளவுகளில், சிலவை சிகிச்சையை வெளிப்புறமாக (உடலிற்கு அல்லது அக்குபஞ்சர் புள்ளிகள்) அளிக்கும், சிலவை உட்புறதிற்கு (இரத்தத்திற்கு அல்லது நுரையீரல்களுக்கு) சிகிச்சை அளிக்க பயன்படும். சோதனைகளின் இந்த திறனாய்வு ஒரே ஒரு சீரற்ற சோதனையை கண்டது, அதில் தரவு மிக மோசமாக அறிக்கையிடப்பட்டிருந்தது, மற்றும் ஆக்கமான பயன்கள் மற்றும் தீங்குகளை பற்றி தெளிவுபடுத்தவில்லை. குறைந்த ஆற்றல் லேசர் சிகிச்சையின் மதிப்பு கணிக்கப்படும் வரை, அது சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.