வீட்டில் காயங்கள் ஏற்படுவது மிகவும் பொதுவானதாகும். வீட்டில், பெரும்பாலான காயங்கள் வயதான மக்கள் மற்றும் ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளில் ஏற்படும். அதிக மக்கள், காயங்கள் மற்றும் காய அபாயங்களை குறைப்பதற்கு அல்லது முயற்சிப்பதற்கு அவர்களின் வீட்டை மாற்றியமைக்க ஊக்கப்படுத்தப்படுகின்றனர். பூட்டுகளை அலமாரிகளில் வைத்தல், படிக்கட்டு கதவுகளை நிறுவுதல், முன்கூடங்கள் மற்றும் படிக்கட்டு பகுதிகளில் வெளிச்சத்தை மேம்படுத்துதல், மற்றும் தடுக்கி விழக் கூடிய இடையூறுகளை அகற்றுதல் ஆகியவை பொதுவான மாற்றங்களில் உள்ளடங்கும். அத்தகைய மாற்றங்கள், வீடுகளில் ஏற்படும் காயங்களை குறைக்கும் என்பதற்கு ஆய்வுகளிலிருந்து போதுமான ஆதாரம் இல்லை என்று இந்த திறனாய்வு கண்டது, ஆனால் இந்த தலையீடுகள் திறனற்றவை என்று அது முடிவு செய்யவில்லை. காயங்களை விளைவுகளாக உள்ளடக்கும் பெரியளவு மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆய்வுகள் வீட்டு புறநிலை மாற்றங்களை ஆராய்வதற்கு தேவைப்படுகின்றன.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.