புறநரம்புகள் சேதமடைவதால் பொதுவாக நரம்பு சார்ந்த வலி உண்டாகிறது. குத்துவது அல்லது எரிகின்றது போன்ற உணர்வு, மற்றும் வலி அல்லா தூண்டுதலுக்குக்கு அசாதாரண உணர்திறன் போன்றவை இதன் அறிகுறிகள். நரம்பு சார்ந்த வலிக்கு சிகிச்சை அளிப்பது கடினம். உளச்சோர்வு போக்கிகள் மற்றும் வலிப்படக்கிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பக்க விளைவுகள் அதிகம் இருப்பதால் இதன் பயன்பாடு குறைவாகவே இருக்கும். ட்ரமடால் (Tramadol) லேசான அபின் கலந்த மருந்து பண்புகள் கொண்ட ஒரு தனிச்சிறப்புமிக்க வலி நிவாரண மருந்து ஆகும்.
நவம்பர் 2008 செய்யப்பட்ட திறனாய்வின் புதுப்பிக்கப்பட்ட இந்த பதிவில்374 பங்கேற்பாளர்கள் கொண்ட 5 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் இந்த திறனாய்வின் சேர்ப்பு விதிகளுக்கு உட்பட்டுஇருந்ததோடு ட்ரமடா (Tramadol)லுடன் மருந்தற்ற குளிகையைஒப்பீடு செய்தன. இந்த ஆய்வுகளிளிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் சுற்றயல் நரம்பு சார்ந்த வலிக்கு 100-400 மில்லிகிராம் ட்ரமடல் (Tramadol) ஒரு திறனான நோய் அறிகுறிசார்ந்த சிகிச்சை என்று காண்பித்தன. 40 பங்கேற்பாளர்களுக்கு குறைவாக இருந்த ஒரு ஆய்வு மார்பின்னையும் ட்ரமடல்லையும்ஒ ப்பிட்டது, 21 பங்கேற்பாளர்களை கொண்ட மற்றொரு ஆய்வு clomipramineனை ட்ரமடல்லுடன் ஒப்பிடுட்டது. இந்த இரு ஆய்வுகளின் அடிப்படையில் எந்த மருந்து சிறந்தது என்று கூற இயலவில்லை.
ட்ரமடல் (Tramadol) சிகிச்சை மலச்சிக்கல், குமட்டல்உணர்வு, தணித்தல் (தூக்கம் வருவது போன்ற உணர்வு) மற்றும் வாய் வரண்டது போன்ற உணர்வு போன்ற பக்க விளைவுகளை உண்டுபண்ணும். இவை அனைத்தும் சிகிச்சை நிறுத்தியவுடன் சரியாகிவிடும். நாங்கள் திறனாய்வு செய்த ஆய்வுகளில் ட்ரமடல் (Tramadol) எடுத்தவர்களில் எட்டில் ஒருவர் பக்க விளைவுகள் காரணமாக ஆய்வைவிட்டு விலகினர். ட்ரமடால் பயன்பாட்டில், வலிப்புத்தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது மற்றும் அதனை வலிப்பு நோய், நோய் வரலாறு உள்ளவர்களுக்கு கொடுக்க கூடாது.
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு