பக்கவாதத்திற்கு பிறகு ஏற்படும் தோள்பட்டை மூட்டு நழுவலைத் (subluxation) தடுப்பதற்கும் மற்றும் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படும் தாங்கு சாதனங்களின் திறனை உறுதிச்செய்ய போதுமான ஆதரங்கள் இல்லை. பக்கவாதத்திற்கு பிறகு ஏற்படும் தோள்பட்டை மூட்டு நழுவலைத் (subluxation) தடுப்பதற்கும் மற்றும் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படும் தாங்கு சாதனங்களின் திறனை உறுதிச்செய்ய போதுமான ஆதரங்கள் இல்லை. தோள்பட்டை மூட்டு நழுவல் (subluxation) பக்கவாதத்திற்கு பிறகு ஏற்படும் பொதுவான இரண்டாம்நிலை தசைக்கூட்டு பிரச்சினைகளில் ஒன்றாகும். இவை வலி ஏற்படுத்தலாம் மற்றும் மேல் அவையம் (upper limb) மீட்டெடுத்தலுக்கு இடையூறாக இருக்லாம். ஆதரவு சாதனங்கள் பாரம்பரியமாக தோள்பட்டை மூட்டு நழுவலுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. நான்கு ஆராய்ச்சிகள் கொண்ட இந்த திறனாய்வு தாங்கு சாதனங்கள் மூட்டு நழுவலைத் (subluxation) தடுக்குமா தடுக்காதா என்பதை முடிவுச் செய்ய போதுமான ஆதாரம் இல்லை எனவும், ஏற்கனவே நழுவிய (subluxed) தோள்பட்டையில் தாங்கு சாதனங்கள் கன்னக்குழிவில் (glenoid fossa) உள்ள புயவெலும்புத்தலையை (humeral head) மீண்டும் அதே நிலையில் பொருத்த முடியும் என்று கூற எந்தவொரு ஆதாரமும் இல்லை எனவும் கண்டறிந்தது.
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு