தோள்பட்டை வலிக்கு கார்டிகோஸ்டிராய் ஊசிகள்

கார்டிகோஸ்டிராய் ஊசிகள் தோள்பட்டை வலிக்கு குறுகிய கால நன்மை பயக்கலாம்.

சமவாய்ப்பிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளில் இருந்து கிடைக்கும் சான்றுகள் சப் அக்றோமியல் (subacromial) கார்டிகோஸ்ட்ரையாட் ஊசி சுழற்றித்தசை (rotator cuff) நோய்க்கு பயன்படுத்துவதை ஆதரிக்கிறது, எனினும் இதன் விளைவு, குறைவானதாகவும்,குறுகிய காலத்திற்கு மாத்திரம் நீடிப்பதாகவும் இருக்கலாம், மேலும், இயக்க ஊக்கிகள் அல்லாத அழற்சி எதிர்ப்பான் மருந்துகளை (NSAID) விட சிறந்தவையாக இல்லாமலும் இருக்கலாம். மூட்டினுள் ஊசி முலம் அளிக்கப்படும் கார்டிகோஸ்டிராய்ட், தாளிறுக்கம் நோய்க்கு (adhesive capsulitis)அளவான, குறுகிய கால நன்மையை பயக்கலாம். தோள்பட்டை வலிக்குறிய, கார்டிகோஸ்டிராய்ட் ஊசியின் திறனை அறிய, மேலும் சோதனைகள் தேவைப்படுகிறது. ஊசியை சரியான இடத்தில் குத்துவது, உடல்கூறியல் தளம், கால இடைவெளி, மருந்தின் அளவு, கார்டிகோஸ்டிராய்டின் வகை, ஆகியவை, இந்த ஊசியின் திறனின் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா, போன்ற வினாகளுக்கு தெளிவு தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஷங்கர் கணேஷ் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information