வயிற்றுப்புண்ணிலிருந்து மீண்டும் மீண்டும் வரும் இரத்தப்போக்கை தடுப்பதற்காக நுண்ணுயிர்க் கொல்லி ஒப்பு அமில மட்டுப்படுதல் சிகிச்சை. (நீண்டகால அமில மட்டுப்படுதல் பராமரிப்பு சிகிச்சை அல்லது இல்லாமலும்)

வயிற்றில் சுரக்கும் அமிலசாறுகள் வயிற்றின் உட்பூச்சு (இரைப்பை புண்) மேல்சிறுகுடல் (முன் சிறு குடல் புண்) ஆகியவற்றில் சேதத்தை ஏற்படுத்துவதால் வயிற்றுப்புண் உண்டாகிறது. இது வலி, அஜீரணம் மற்றும் சில நேரங்களில் இரத்தப்போக்கு ஆகியவை ஏற்பட காரணமாகிறது. குடல் இரத்தக்கசிவு உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. வயிற்றுபுண்னண ஆற வைப்பது மற்றும் எதிர்காலத்தில் இரத்தப்போக்கை தடுப்பதும் பல வேறு சிகிச்சைகளின் நோக்கம் ஆகும். இந்த சிகிச்சை வகைகளில் உள்ளடங்கிய அமில மட்டுப்படுதல் மருந்துகள் மற்றும், ஹெலியோபாக்டர் பைலோரி (Helicobactor pylori) என்ற ஒரு பாக்டிரியாவால் உண்டாக்ககூடிய வயிற்றுப்புண்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை. திறனாய்viலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஹெலியோபாக்டர் பைலோரி பாக்டிரியாவால்ஏற்ப்பட்ட வயிற்றுப்புண்ணிலிருந்து இரத்தகசிவு வரப்பெற்றவர்களுக்கு, நுண்ணுயிர்க் கொல்லி மூலம் சிகிச்சை அளித்தால், இரைப்பை குடல்பகுதியில் ஏற்ப்படும் இரத்தகசிவை, அமில மட்டுப்படுதல் சிகிச்சையை விட மேலும் திறம்பட தடுக்கின்றது. ஹெலியோபாக்டர் பைலோரி தொற்று இருக்கும் போது நீண்டகால அமில அணைத்தல் மருந்துகளை விட நுண்ணுயிர்க் கொல்லி என்பது மலிவான மற்றும் வசதியான சிகிச்சை ஆகும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: அம்பிகை அருணகிரி மற்றும் சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information