இதய சம்பந்தம்-அல்லாத நெஞ்சு வலிக்கு புலனுணர்வு நடத்தை சிகிச்சைகள்

இதயத் தமனி நோய் இல்லாத நிலையில் மீண்டும் மீண்டும் ஏற்படும் நெஞ்சு வலி ஒரு பொதுவான ஒன்றாகும், மற்றும் சிகிச்சையளிக்க கடினமான ஒரு பிரச்னையாகும், சில நேரங்களில், இது மருத்துவ பராமரிப்பை அதிகமாக பயன்படுத்த வழிவகுக்கிறது. ஒரு கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் எதிர்மறையான மருத்துவ மதிப்பீடு மூலம் உறுதியளிக்கப்படாமல், தொடர்ந்து வலி மற்றும் வரம்புகளைக் கூறுகிறார்கள். உளவியல் காரணிகள் சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொண்டதாக தோன்றுகிறது. இந்த காக்ரேன் திறனாய்வில், இதய சம்பந்தம்-அல்லாத நெஞ்சு வலிக்கான உளவியல் சிகிச்சையின் அனைத்து ஆய்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. பதினேழு சோதனைகள் சேர்க்கை அடிப்படையை சந்தித்தன, மற்றும் மொத்தமாக 1006 பங்கேற்பாளர்களை உள்ளடக்கின. புலனுணர்வு-நடத்தை சிகிச்சைகள் இதய சம்பந்தம்-அல்லாத நெஞ்சு வலிக்கு, குறுகிய காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் (குறைந்த நெஞ்சு வலியின் அடுக்கு நிகழ்வு அடிப்படையில்) என்று இந்த திறனாய்வு கண்டறிந்தது. உளவியல் சிகிச்சையின் பாதகமான விளைவுகள் காணப்படவில்லை. ஹிப்னோதெரபியும் ஒரு சாத்தியமான மாற்று ஆகும். ஒட்டுமொத்தமாக, ஓரளவு குறைந்த ஒரு தலை சார்பு அபாயம் இருந்தாலும், சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகளின் உயர்ந்த மாறுபாட்டு தன்மை ஒரு பரவலான விளைவுகளின் மேல் பிரதிபலித்தது இந்த திறனாய்வின் ஒரு வரம்பாகும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information