'மேம்பட்ட காய உயிர் ஆதரவு' (அட்வான்ஸ்டு டிராமா லைப் சப்போர்ட், ஏடிஎல்எஸ்) பயிற்றுவிப்பு, பணக்கார மற்றும் ஏழை நாடுகள் இரண்டிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஏடிஎல்எஸ், காயம்பட்ட மக்களுக்கு பராமரிப்பு அளிப்பதின் வழியை மேம்படுத்த நோக்கம் கொண்டு, அதினால் இறப்பு மற்றும் இயலாமையை குறைக்கிறது. ஏடிஎல்எஸ் திட்டங்கள், பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களின் அறிவை மேம்படுத்துவதாக நடத்தப்பட்ட சில ஆராய்ச்சி பரிந்துரைக்கின்றன, ஆனால், காயம்பட்ட நோயாளிகளில் இறப்பு மற்றும் இயலாமையின் விகிதத்தின் மீது ஏடிஎல்எஸ் - பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களுடைய (அல்லது அதே போன்ற திட்டங்களில் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்கள்) தாக்கத்தை காட்ட எந்த கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளும் இருக்கவில்லை. இந்த திறனாய்வு, அதிகமான ஆராய்ச்சிக்கு அறைகூவல் விடுக்கிறது மற்றும் எதிர்கால ஆராய்ச்சியை எவ்வாறு நடத்தலாம் என்பதற்கான முன்கூட்டிய பரிந்துரைகளை வைக்கிறது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.