கிடைக்கப்பெறும் பாரம்பரியமான சிகிச்சைகள் ஓரளவே பயன் தருவதாலும் மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடுவதாலும், பெரும்பான்மையான எம்எஸ் நோயாளிகள் சிறப்பு உணவுத்திட்டங்கள் மற்றும் உபச்சத்து உணவுகள் போன்ற ஈடு செய்யும் மற்றும் மாற்று சிகிச்சை முறைகளை மேற்கொள்கின்றனர். உண்மையில் உள்ளபடி, டயட் மற்றும் மல்டிபிள் ஸ்க்லோரோசிஸ் ஆகிய சொற்களை பயன்படுத்தி இணையத்தில் தேடும் போது, அது 2.7 கோடிக்கும் அதிகமான இணைப்புகளை உருவாக்குகின்றன. இது, மல்டிபிள் ஸ்க்லோரோசிஸ் நோயாளிகள் இடையே பரந்தளவில் பயன்படுத்தப்பட்டு மற்றும் நம்பப்படுவதாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது. பாலிஅன்சாட்டுரேடேட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒவ்வாமை காரணிகள் (குளுடன் மற்றும் பால்) அற்ற உணவுகள், வைட்டமின்கள் மற்றும் நுண்சத்துகள் மற்றும் செலினியம், கிங்கோ பிலோபா சாறுகள் மற்றும் துணை-நொதிகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் போன்ற உபச்சத்துகளே மிக பொதுவான உணவுத்திட்ட தலையீடுகளாகும். எம்எஸ் கொண்ட மக்களில், உணவுத்திட்ட பழக்க மாற்றங்கள் நோய் தாக்க கணிப்பின் மீது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை மதிப்பிட இந்த திறனாய்வின் ஆசிரியர்கள் முயற்சி செய்தனர். இந்த தலைப்பில் மிக பிரமாண்டமான அளவில் தரவு இருந்தாலும், PUFA-வை கொண்டு மொத்தம் 794 நோயாளிகளை கொண்ட 6 கட்டுப்பாட்டு சோதனைகள் மட்டுமே இந்த திறனாய்வின் செயல்முறையியல் தர சேர்க்கை விதிகளை பூர்த்தி செய்தன. வைட்டமின்கள் மற்றும்ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் போன்ற உபச்சத்துகளை கொண்ட எந்த ஆய்வுகளும் எங்களின் சேர்க்கை விதியை சந்திக்கவில்லை. அறிவியல் தரவுத்தளங்களை ஆழமாக ஆராய்ந்த பிறகும், பிற முன்மொழியப்பட்ட உணவுத்திட்ட தலையீடுகள் மீதான எந்த ஆய்வுகளையும் நாங்கள் காணவில்லை.PUFA உபச்சத்து மூலம் ஏதும் சாத்தியமான நன்மை அல்லது அதின் தீங்கை பற்றி மதிப்பிட கிடைக்கப்பெறும் தரவு பாற்றாக்குறையாகவே உள்ளது. 50-75% எம்எஸ் கொண்ட மக்கள் உணவுத்திட்ட முறைகளை மற்றும் உபச்சத்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது, PUFA மீது எந்த ஆதாரமும் இல்லாததும் மற்றும் பிற உபச்சத்துகள் மீது பரந்தளவு தரவு இல்லாதததும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வாகும்.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்