நீரிழிவு நோய் கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கான உடற்பயிற்சி

நீரிழிவு நோய் கொண்ட கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி திட்டங்களில் சேரும் போது அவர்களுக்கு பரிந்துரைக்க அல்லது அதற்கு எதிராக அறிவுறுத்த போதுமான தகவல் இல்லை.

நீரிழிவு நோய் கொண்ட கர்ப்பிணி பெண்களில் கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்த உடற்பயிற்சி முன்மொழியப்பட்டது. இந்த சிகிச்சை முறையை 114 கர்ப்பிணி பெண்கள் பங்குபெற்ற நான்கு சிறிய சோதனைகள் சோதித்தன. முதலாம் வகை அல்லது இரண்டாம் வகை நீரிழிவு நோய் கொண்ட கர்ப்பிணி பெண்களை எந்த ஆய்வும் இணைக்கவில்லை. உடற்பயிற்சி திட்டங்களில் பங்குபெற பதிவு செய்யும் நீரிழிவு நோய் கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்க அல்லது எதிராக அறிவுறுத்த போதுமான ஆதாரம் இல்லை. அதிகமான ஆய்வு மக்களை கொண்ட மேற்படியான சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information