திறனாய்வு கேள்வி
பகல்நேர பராமரிப்பு மையங்கள், பள்ளிகள், சமூகங்கள் அல்லது மருத்துவமனைகளில் உள்ள சிறுவர் மற்றும் பெரியோரை கை கழுவ ஊக்கப்படுத்துவதின் மூலம் தடுக்கப்படும் வயிற்று போக்கின் நிகழ்வுகள் குறித்து மதிப்பிட்ட ஆய்வுகளை இக் காக்ரேன் திறனாய்வு விளக்குகின்றது. 27 மே 2015 வரையிலான இது குறித்த ஆய்வுகளை ஆராய்ந்த பின்பு நாங்கள் உயர் வருவாய் நாடுகள் மற்றும் குறைந்த அல்லது நடுத்தர வருவாய் நாடுகளில் நடத்தப்பட்ட 22 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை இத்திறனாய்வில் சேர்த்துள்ளோம். இவ்வாய்வுகளில் மொத்தம் 69,309 சிறுவர் மற்றும் 148 பெரியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கை கழுவுதல் எவ்வாறு வயிற்றுப் போக்கை தடுக்கின்றது, மற்றும் கை கழுவுதலை எவ்வாறு ஊக்கப்படுத்துவது.
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வயிற்று போக்கினால் பெருமளவில் மரணங்கள் ஏற்படுகின்றது. ஒரு நபரிடமிருந்து மற்றவருக்கு மலக் கழிவுகளால் தூய்மைக் கேடடைந்த உணவு மற்றும் தண்ணீர் மூலமாகவோ அல்லது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொடுகை முலமாகவே வயிற்று போக்கை உண்டாக்கும் நுண்ணுயிர்கள் பரவுகின்றன. மலம் கழித்ததும் ,குழந்தைகளின் கீழ் பகுதிகளை கழுவிய பின்,உணவு சமைக்குமுன் மற்றும் உணவு உண்ணுமுன் கை கழுவுதல் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை பெருமளவு தடுக்கும். சுகாதார கல்வி, நுண்ணுயிர் விழிப்புணர்வு ,விளம்பரத்தட்டி, துண்டு பிரசுரம், நகைச்சுவை புத்தகங்கள், பாடல்கள் மற்றும் நாடகம் வாயிலாக குழு அல்லது தனி நபர் பயிற்சியின் மூலம் கை கழுவுதலை ஊக்கப்படுத்தலாம்.
இந்த திறனாய்வு என்ன கூறுகிறது:
உயர் வருவாய் நாடுகளில் உள்ள குழந்தை பகல் பாதுகாப்பு மையங்கள் அல்லது பள்ளிகளில் கை கழுவுதலை ஊக்கப்படுத்துவதால் சுமார் 30 % வயிற்றுப்போக்கு நிகழ்வுகள் குறைந்துள்ளது.குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் உள்ள பள்ளிகளிலும் இதற்கு ஒத்த விகிதம் காணப்படுகின்றது.குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் சமூகத்தில் கை கழுவுதலை ஊக்கப்படுத்துவதன் பலனாக சுமார் 28% வயிற்றுப்போக்கு நிகழ்வுகள் குறைந்துள்ளது (மிதமான தரச்சான்று).இம்மதிப்பாய்வுரையில் சேர்க்கப்பட்டுள்ள ஒரே மருத்துவமனை சார்ந்த ஆய்வு சராசரியாக ஏற்படும் வயிற்றுப்போக்கு நிகழ்வை கை கழுவுதல் தடுத்துள்ளதாக கண்டறிந்துள்ளது (மிதமான தர சான்று)குறைந்த பங்கேற்பாளர்களைகொண்டு நடத்தப்பட்டஇம்மருத்துவமனைசார்ந்த ஆய்வின் முடிவுகளைஉறுதிசெய்ய நிறைய ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்கை கழுவுதலை ஊக்கப்படுத்துவதால் ஏற்பட்ட கை சுத்தம் குறித்த செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவுகள் கட்டுப் படுத்தப்பட்ட குழுக்களை விட தலையீட்டு குழுக்களில் சிறப்பாக உள்ளது(குறைந்த தரச்சான்றிலிருந்து உயர்ந்த சான்று ) இம்மதிப்பாய்யுரையில் சேர்க்கப்பட்ட எந்த ஆய்வுகளும் வயிற்றுப்போக்கு சார்ந்த இறப்புகள், ஐந்து வயதிற்கு உட்பட்டோரின் இறப்பு நிலைக்கான காரணம் ஆகியவற்றில் கை கழுவுதலை ஊக்கப்படுதுவதின் விளைவுகளையோ அல்லது கை கழுவுதலை ஊக்கப்படுத்துவதன் விலைப்பயன் திறன்களையோ சோதித்தறியவில்லை
முடிவுரை
உயர் வருவாய் நாடுகளிலும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளிலும் கை கழுவுதலை ஊக்கப்படுதுவதனால் வயிற்றுப்போக் கிற்கான நிகழ்வு நிலை சுமார் 30% குறைந்துள்ளது . இருப்பினும் கை கழுவும் பழக்கங்களை மக்கள் தொடர்ந்து நீண்ட நாள் கடைபிடிக்க எவ்வாறு உதவுவது என்பது குறித்து மிக குறைவாகவே அறியப்பட்டிருக்கின்றது.
மொழிபெயர்ப்பு: மோகன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு