புண்களை மூட தையல்கள் அல்லது தைப்பு முள்களின் இடத்தில் திசு பசைமங்கள் அல்லது பசைகள் அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அறுவை சிகிச்சை புண்களை மூடுவதற்கு, தையல்களைக் காட்டிலும் திசு பசைமங்கள் விரைவாகவும் மற்றும் பயன்படுத்த எளிதாகவும் இருக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது. திசு பசைமங்கள், தையல்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளின் கூரிய காயத்தின் அபாயத்தை கொண்டிருப்பது போல் அல்லாமல் மற்றும் தொற்றுக்கு ஒரு தடையை வழங்குவதாக எண்ணப்படுகிறது. இது என்ன அர்த்தமென்றால், அவை குணமாகுதலை மேம்படுத்துகிறது மற்றும் தையல்களைப் பிரிப்பதற்கான தேவையை தவிர்க்கிறது.
ஆராய்ச்சியாளர்கள், மார்ச் 2014 வரைக்குமான மருத்துவ இலக்கியத்தை தேடினார்கள், மற்றும் புண்களின் மூடலுக்கு திசு பசைமங்களின் பயன்பாட்டை ஆராய்ந்த 33 மருத்துவ ஆய்வுகளை அடையாளம் கண்டனர். திசு பசைமையை , மூடலின் பிற செயல்முறையான தையல்கள், தைப்பு முள்கள், பட்டி அல்லது இன்னொரு விதமான திசு பசைமையோடு அவர்கள் ஒப்பிட்டனர். புண்கள் முடியபடி இருந்தனவா, மற்றும் கிழியாமல் இருந்தனவா மற்றும் அவை தொற்று கொண்டதா என்பவை ஆர்வம் கொண்ட முக்கிய விளைவுகளாக இருந்தன. தையல்கள் பயன்படுத்தப்பட்ட போது, குறைவான புண்கள் பிளந்தன என்று இந்த திறனாய்வின் முடிவுகள் தெளிவாக காட்டியது. பிற வகைகளைக் காட்டிலும், சில வகைகளான திசு பசைமங்கள் பயன்படுத்துவதற்கு சற்றே துரிதமானவையாக இருக்கக் கூடும் என்று ஆய்வுகள் அறிக்கையிடுகின்றன. ஒப்பனை முடிவுகள் அல்லது செலவுகளுக்கு, திசு பசைமங்கள் மற்றும் மாற்று மூடல் செயல்முறைகள் இடையே எந்த தெளிவான வித்தியாசமும் இல்லை. அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் விருப்பப்பட்ட தோல் மூடல் முறைக்கான முடிவுகள் கலவையாக இருந்தன.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம்,ஸ்ரீகேசவன் சபாபதி.