வயது வந்தவர்களில், எந்த தெரிந்த காரணமும் இல்லாமல் ஏற்படும் முதன்மை உயர் இரத்த அழுத்த நோய்க்கு பொட்டாசியம் உபச்சத்தை பரிந்துரைக்கலாமா என்பதை இந்த திறனாய்வு சோதித்தது. சோதனைகளின் முடிவுகள் வேறுப்பட்டு இருந்தன: ஒரு போலி மருந்தை விட பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைத்தது என்று சில சோதனைகள் கண்டன; சிலவை பொட்டாசியம் மற்றும் போலி மருந்து இடையே சிறிய வித்தியாசத்தையே கண்டன. ஒட்டுமொத்தமாக, பொட்டாசியம் உபச்சத்தை எடுத்துக் கொள்வதால், இரத்த அழுத்தத்தில் எந்த குறிப்பிடத்தகுந்த குறைவும் ஏற்படவில்லை என காணப்பட்டது.
சேர்க்கப்பட்டிருந்த பெரும்பாலான சோதனைகள் குறைவான தரமுடையதாய் இருந்தன; ஆதலால் அவற்றின் முடிவுகள் நம்ப தகுந்தவையாக இல்லாமல் இருக்கலாம். உயர் இரத்த அழுத்த நோயினால் இறப்பு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்படக் கூடிய அபாயத்தை பொட்டாசியம் உபச்சத்து குறைக்குமா என்பதை அளவிட சோதனைகள் நீண்ட-காலம் அல்லாமலும் மற்றும் பெரியளவில் இல்லாமலும் இருந்தன. பொட்டாசியம் உபச்சத்தினை எடுத்துக் கொள்வதால் எந்த ஆபத்தான பக்க விளைவுகளும் இல்லையென பாதகமான விளைவுகளை அறிக்கையிட்ட ஆய்வுகள் கண்டன.
பொட்டாசியம் உபச்சத்து உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடும் என்பதை இந்த திறனாய்வு உறுதிப்படுத்தவிலை மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் சிகிச்சைக்கு இதை பரிந்துரைக்காது. பொட்டாசியம் உபச்சத்து உயர் இரத்த அழுத்தத்தை குறைக்குமா அல்லது குறைக்காதா என்பதை அறிய அதிக எண்ணிக்கையிலான ஆய்வு பங்கேற்பாளர்கள் மற்றும் நீண்ட-கால பின் தொடர்தல் மதிப்பீடுகளைக் கொண்ட அதிகமான சோதனைகள் தேவைப்படுகின்றன.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்