குழந்தைகள் மற்றும் இளவயது மக்களிடையே பதட்டம் மற்றும் மனச்சோர்வை தடுப்பதற்கு மற்றும் சிகிச்சையளிப்பதற்கு உடற்பயிற்சி

மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை தடுப்பதற்கு மற்றும் சிகிச்சையளிப்பதற்கு உடற்பயிற்சியானது ஒரு செயல்மிக்க யுக்தியாக முன்னேற்றம் பெற்றுள்ளது. இதற்கான ஆராய்ச்சி தரவு மிகவும் குறைவாக இருக்க கண்டோம் மற்றும் பெரும்பான்மையான ஆய்வுகள் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்டுள்ளன. சிகிச்சையின்மையோடு ஒப்பிடுகையில், ஆரோக்கியமான குழந்தைகளில் பதட்டத்தின் அளவுகளை உடற்பயிற்சி குறைத்தது என்று ஆறு சிறிய சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிகிச்சையின்மையோடு ஒப்பிடுகையில், மனச்சோர்வின் அளவுகளை உடற்பயிற்சி குறைத்தது என்று ஐந்து சிறிய சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன. குழந்தைகளுக்கான சிகிச்சையின் ஆதார அடிப்படை மிகவும் குறைவாக உள்ளது; மனச்சோர்வில் உடற்பயிற்சியின் விளைவு பற்றி மூன்றே மூன்று சிறிய சோதனைகள் சோதித்துள்ளன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளார்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information