சுக்கிலவக புற்றுநோய்க்கான முன்கண்டறிதல் சோதனை

சுக்கிலவக (புரோஸ்டேட்) புற்றுநோய் என்பது ​ உலகம் முழுவதும் உள்ள ஆண்களில் ஏற்படும் மிகவும் பரவலான புற்றுநோய் வடிவங்களில் ஒன்றாகும். எந்த அறிகுறிகளும் அல்லது நோய் குறியீடுகளும் இல்லாத நிலையில் நோய் கண்டறியும் சோதனைகளை செய்ய வேண்டும் என்று புரோஸ்டேட் புற்றுநோய் முன்கண்டறிதல் குறிக்கிறது. விரல் முறை மலக்குடல் பரிசோதனை (டிஜிட்டல் ரெக்டல் எக்ஸாமினேசன், டிஆர்இ), சுக்கிலவக-பிரத்யேகமான உடற்காப்பு ஊக்கி (புரோஸ்டேட்-ஸ்பேசிபிக் அண்டிஜென், பிஎஸ்ஏ), இரத்தப் பரிசோதனை, மற்றும் மலக்குடல் வழியான மீயொலி (ட்ரான்ஸ்ரெக்டல் அல்ட்ராசவுண்ட், டிஆர்யுஎஸ்) மூலம் வழி நடத்தப்படும் உடல் திசு ஆய்வு ஆகியவை இந்த சோதனைகளில் அடங்கும். புற்று நோய்களின் தொடக்கநிலை ​ மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய கட்டத்தில் அடையாளம் கண்டு அதன் மூலம் வெற்றிகரமான சிகிச்சை வாய்ப்புக்களை அதிகரித்து அதே சமயம், ஒரு நோயாளியின் எதிர்கால வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே ​முன்கண்டறிதல் சோதனையின் நோக்கமாக இருக்கிறது. இந்த திறனாய்வு, மொத்தம் 341,342 பங்கேற்பாளர்களைக் கொண்ட ஐந்து தொடர்புடைய ஆய்வுகளை அடையாளம் கண்டது. இரண்டு ஆய்வுகள், குறைந்தளவு ஒரு தலைச் சார்பு ஆபத்து கொண்டவை என மதிப்பிடப்பட்டன, அதே நேரத்தில், மீதமிருந்த மூன்றும் மிக அதிகமான செயல்முறையியல் பலவீனங்களை கொண்டதாக இருந்தது. சேர்க்கப்பட்டிருந்த அனைத்து ஐந்து ஆய்வுகளின் மெட்டா-பகுப்பாய்வும் புரோஸ்டேட் புற்றுநோய்- பிரத்யேகமான இறப்பியல்பில் எந்த குறிப்பிடத்தக்க புள்ளியியல் குறைவையும் காட்டவில்லை (இடர் விகிதாச்சாரம் (ரிஸ்க் ரேசியோ, ஆர்ஆர்) 1.00, 95% நம்பக இடைவெளி (கான்பிடன்ஸ் இண்டெர்வல், சிஐ) 0.86-1.17 வரை). இரண்டு குறைந்தளவு ஒரு தலை சார்பு ஆபத்து கொண்ட ஆய்வுகளின் மெட்டா-பகுப்பாய்வு புரோஸ்டேட் புற்றுநோய்- பிரத்யேகமான இறப்பியல்பில் எந்த குறிப்பிடத்தக்க குறைவையும் (ஆர்ஆர் 0.96, 95% 1.30 சிஐ 0.70-1.30 வரை) சுட்டிக்காட்டவில்லை. ஒரு முன்-குறிப்பிடப்பட்ட ஆண்களின் உட்குலத்தில், புரோஸ்டேட் புற்றுநோய்-பிரத்யேகமான இறப்பியல்பில் ஒரு குறிப்பிடத்தக்க 21% தொடர்புடைய குறைவு (95% சிஐ 31% -8% வரை ) இருந்ததாக இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டிருந்த ஒரே ஒரு ஆய்வு (ஐரோப்பியன் ரான்டமைசிட் ஸ்டடி ஆப் ஸ்கிரினிங் பார் புரோஸ்டேட் கேன்சர், இஆர்எஸ்பிசி) மட்டும் பதிவு செய்திருந்தது. இந்த முடிவுகள், மிக அதிக புரோஸ்டேட் புற்றுநோய் இறப்பு விகிதங்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறாக ​பெருமளவான ​ குறைப்பு மதிப்பீடுகளை ​கொண்டிருந்த ​இஆர்எஸ்பிசி ஆய்வினுள் ​இருந்த இரு நாடுகளால் முதன்மையாக உந்தப்பட்டது. இஆர்எஸ்பிசி ஆய்வில் 55 முதல் 69 வயது வரையான ஆண்கள் மத்தியில், ஒரு சராசரி பின்-தொடர் காலமாகிய 11 ஆண்டுகளின் போது புரோஸ்டேட் புற்றுநோயால் ஒரு கூடுதல் மரணம் நேரிடாமல் தடுக்க 1055 ஆண்களுக்கு முன்கண்டறிதல் சோதனை செய்யப்பட வேண்டும் என்று ஆய்வின் ஆசிரியர்கள் பதிவு செய்தனர். அதிகப்படியான நோய் அறுதியீடு, அதிகப்படியான சிகிச்சையினால் ஏற்படும் தீங்குகள், பிஎஸ்ஏ சோதனையின் பொய்யான-நேர் முடிவுகள், தொற்று, இரத்தப்போக்கு, மற்றும் திசு ஆய்வு தொடர்புடைய வலி ஆகியவை தீங்கு விளைவுகளில் சேர்க்கப்பட்டிருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information