கீழ் முதுகு வலிக்கான மேலோட்ட வெப்பம் அல்லது குளிர்.

மூன்று மாதங்களுக்கு குறைவாக நீடிக்கும் கீழ் முதுகு வலியுடைய நோயாளிகளுக்கு, வெப்ப உறை சிகிச்சை முறை, வலி மற்றும் செயலாமையை குறைக்கிறது என்பதற்கு மிதமான ஆதாரம் இருக்கிறது.இந்த நிவாரணம் குறுகிய நேரத்திற்கு மட்டுமே நீடிக்கிறது, மற்றும் ஒப்பீட்டளவில் சிறிதளவு பலனை அளிக்கிறது எனவும் தெரிய வருகிறது.ஆனால், வெப்பஉறை சிகிச்சையுடன் கூடிய உடற்பயிற்சி கூடுதல் நன்மை அளிப்பதாக தோன்றுகிறது.கீழ் முதுகு வலியின் கால அளவு எதுவாயினும், அதற்கு அளிக்கப்படும் குளிர் சிகிச்சையின் விளைவு பற்றியோ, அல்லது மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்கும் முதுகு வலிக்கு அளிக்கப்படும் வெப்ப சிகிச்சையின் விளைவு பற்றியோ, இம்மட்டும் போதுமான ஆதாரமில்லை.

வெந்நீர் புட்டிகள், தானியம் நிரப்பப்பட்ட மெல்லிய வெப்ப பொதிகள், தவிட்டுப் பொதிகள், வெப்ப துண்டுகள், வெப்ப குளியல்கள், வெப்ப அறைகள், நீராவி, வெப்ப உறைகள், வெப்ப பட்டைகள், மின்சார வெப்ப பட்டைகள் மற்றும் அகச்சிவப்பு வெப்ப விளக்குகள் ஆகியவை வெப்ப சிகிச்சைகளில் அடங்கும்.பனிக்கட்டி, குளிர் துண்டுகள், குளிர்ந்த பிசின் பொதிகள், பனிக்கட்டி பொதிகள் மற்றும் பனி நீவுதல் முதலியவை குளிர் சிகிச்சைகளில் அடங்கும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்,தங்கமணி ராமலிங்கம்,ப்ளசிங்டா விஜய்,ஸ்ரீகேசவன் சபாபதி. இந்த மொழிபெயர்ப்பு குறித்த கேள்விகளுக்கு, தொடர்பு கொள்ள (மின்னஞ்சல்):cynthiaswarnalatha@gmail.com; atramalingam@gmail.com

Tools
Information